

மும்பை: மகாராஷ்டிர மாநிலம் நவிமும்பையைச் சேர்ந்த 56 வயது பெண், சன்படா காவல் நிலையத்தில் அளித்த புகாரில் கூறியிருப்பதாவது:
எனக்கு திருமணமாகி ஒரு மகன் இருக்கிறார். கடந்த 2020-ல் கணவரை பிரிந்தேன். அதன் பிறகு மும்பையை அடுத்த குபி பரேடு பகுதியைச் சேர்ந்த ஒருவருடன் முகநூலில் பழக்கம் ஏற்பட்டது. இருவரும் திருமணம் செய்துகொண்டோம். அதன் பிறகுதான் அவருக்கு ஏற்கெனவே திருணம் ஆகி இருந்தது தெரிய வந்தது.
பின்னர் அவர் என்னை அடித்து துன்புறுத்தினார். மேலும்ரூ.36 லட்சம் ரொக்கம் மற்றும் ரூ.9 லட்சம் மதிப்பிலான நகைகளுடன் ஓடிவிட்டார். அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார். புகாரின் அடிப்படையில் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.