

மதுரை: மதுரை மாநகரில் கடைகளில் குட்கா, புகையிலை, கூலிப், சிகரெட் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் லோகநாதன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
பசுமலை பகுதியில் பள்ளி, கல்லூரி அருகேயுள்ள டீக் கடைகள், பெட்டிக் கடைகளில் காவல் ஆணையர் லோக நாதன், துணை ஆணையர் பிரதீப் நேற்று ஆய்வு செய்தனர். திரு நகர் பகுதி பள்ளி அருகே ஓரிரு பெட்டிக் கடைகளில் சிகரெட்டுகள் விற்பது தெரியவந்தது. இதையடுத்து கடைக்காரர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
அவர் கூறுகையில், சட்ட விரோதமாக குட்கா, புகையிலை பொருட்கள் விற்பனையில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கடையின் உரிமத்தை ரத்து செய்ய பரிந்துரைத்து ‘சீல்’ வைக்கப்படும் என்றார்.