கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் செய்யாறில் மீட்பு

கடத்தப்பட்டதாக கூறப்பட்ட நிலையில் சென்னையை சேர்ந்த தொழிலதிபர் செய்யாறில் மீட்பு
Updated on
1 min read

சென்னை: சென்னை கோயம்பேட்டைச் சேர்ந்தவர் அனுராதா (45). இவர் கடந்த மாதம்21-ம் தேதி கோயம்பேடு காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்று அளித்திருந்தார். அதில், ‘எனது கணவர் சதீஷ்(47). இவரை கடந்த சில தினங்களாககாணவில்லை. அவரை யாரேனும் கடத்திசென்றார்களா? என்ற அச்சம் உள்ளது.எனவே, எனது கணவரை கண்டுபிடித்து தரவேண்டும்’ என குறிப்பிடப்பட்டு இருந்தது.

இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணையை தொடங்கினர்.சதீஷ் தொழில் அதிபர் என்பதால், அவரை தொழில் போட்டி காரணமாகயாரேனும் கடத்தினார்களா என்ற சந்தேகம் எழுந்தது. இதையடுத்து போலீஸார் முதல் கட்டமாக சதீஷின் வீட்டைச் சுற்றி உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.

மேலும், சைபர் க்ரைம் போலீஸார் உதவியுடன் சதீஷின் செல்போன் லொகேஷனை கண்டறிய முயற்சிக்கப்பட்டது. ஆனால், சதீஷின் செல்போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்ததால் போலீஸாரால் அவரது இருப்பிடத்தை உடனடியாக கண்டறிய முடியவில்லை. இருப்பினும் பல்வேறு கோணங்களில் தேடுதல் பணி நடைபெற்றது.

இந்நிலையில், நேற்று முன்தினம் மீண்டும் செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது, சதீஷ் செய்யாறு பகுதியில் இருப்பது தெரியவந்தது. இதையடுத்து கோயம்பேடு போலீஸார் உடனடியாக அங்கு விரைந்து, சதீஷை சென்னைஅழைத்து வந்து விசாரித்தனர்.

அப்போது, எனக்கு கடன் சுமை அதிகரித்தது. இதனால், மன அழுத்தத்துக்கு ஆளானேன். மன நிம்மதிக்காக பல கோயில்களுக்கு சென்றேன். கடைசியாக செய்யாறு வந்தேன். என்னை யாரும் கடத்தவில்லை. நான்தான் யாரிடமும் சொல்லாமல் வீட்டை விட்டுவெளியேறினேன். என் மீது தான் தவறு.என் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவேண்டாம் என கேட்டுக் கொண்டார். இதையடுத்து அவரை எச்சரித்து, எழுதி வாங்கிக் கொண்டு அனுப்பி வைத்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in