பெங்களூருவில் லிவ்-இன் பார்ட்னரை பிரஷர் குக்கரால் அடித்துக் கொன்ற இளைஞர் கைது

பெங்களூருவில் லிவ்-இன் பார்ட்னரை பிரஷர் குக்கரால் அடித்துக் கொன்ற இளைஞர் கைது
Updated on
1 min read

பெங்களூரு: கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் தன்னுடன் லிவ் இன் பார்ட்னராக வாழ்ந்துவந்த பெண்ணை பிரஷர் குக்கரால் அடித்துக் கொன்றதாக 29 வயது இளைஞர் ஒருவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இச்சம்பவம் சனிக்கிழமை மாலை நடந்துள்ளது என்று போலீஸார் தெரிவித்தனர்.

இதுகுறித்து போலீஸார் கூறும்போது," கேளராவைச் சேர்ந்தவர்கள் வைஷ்ணவ் மற்றும் தேவ் (24). இவர்கள் இருவரும் சுமார் இரண்டு வருடங்களாக பெங்களூருவில் வாடகைக்கு வீடு எடுத்து ஒன்றாக வாழ்ந்து வந்தனர்.கால்லூரியில் அறிமுகமான இவர்கள் பொங்களூரு கோரமங்கலாவில் உள்ள நிறுவனமொன்றில் விற்பனை மற்றும் விளம்பரப் பிரிவுகளில் வேலைபார்த்து வந்துள்ளனர்.

இந்நிலையில், சனிக்கிழமை இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் வைஷ்ணவ், தேவ்-ஐ பிரஷர் குக்கரால் அடித்துக் கொன்றாதாக கூறப்படுகிறது தேவ்-ன் சகோதரி அவரைத் தொலைப்பேசியில் தொடர்பு கொள்ள முயன்று முடியாத நிலையில், பக்கத்தில் இருப்பவர்களைத் தொடர்பு கொண்டு அக்காவைப் பற்றி விசாரித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பக்கத்து வீட்டார் போலீஸுக்கு தகவல் கொடுத்துள்ளனர்" என்றனர்.

இதனைத் தொடர்ந்து வைஷ்ணவ் தப்பியோடிய நிலையில் போலீஸார் அவரைக் கண்டுபிடித்து கைது செய்துள்ளனர். வைஷ்ணவ் மற்றும் தேவ் இருவரும் சேர்ந்து வாழ்ந்து வந்தது அவர்களின் பெற்றோருக்குத் தெரியும் என்றும், தேவ் மீது வைஷ்ணவுக்கு சந்தேகம் இருந்ததால் இருவருக்கும் இடையில் தகராறு இருந்ததும் அதனைத் தீர்க்க அவர்கள் முயன்றுள்ளனர் என்றும் போலீஸார் தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து, "நான் சம்பவ இடத்துக்குச் சென்று பார்வையிட்ட போது பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோரைச் சந்தித்தேன். அப்போது அவர்கள் கடந்த சில நாட்களாக இருவருக்கு இடையில் சண்டை நடந்ததது. நாங்கள் அதனைத் தீர்த்துவைக்க முயன்றோம் எனத் தெரிவித்தனர்" என்று பெங்களூரு தென் கிழக்கு பிரிவு இணை ஆணையர் சி கே பாபா கூறியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக வைஷ்ணவ் மீது கொலை வழக்கு பதிவு செய்துள்ள பெங்களூரு போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in