

சென்னை: சென்னை புளியந்தோப்பை சேர்ந்த பிரபலரவுடி ஆற்காடு சுரேஷ் (49), கடந்த 18-ம்தேதி வழக்கு தொடர்பாக எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜராகி விட்டு மாலையில் பட்டினப்பாக்கம் சென்றார். அங்கு தனது நண்பர் மாதவனுடன் நடந்து சென்று கொண்டிருந்தபோது, காரில் வந்த 7 பேர் கும்பல், சுரேஷை சரமாரியாக வெட்டி கொலை செய்துவிட்டு தப்பியது. தாக்குதலில் மாதவனும் காயம் அடைந்தார். இதுகுறித்து பட்டினப்பாக்கம் போலீஸார் விசாரணை நடத்தினர்.
கொலை தொடர்பாக திருவள்ளூர்மாவட்டம் அரண்வாயல் கிராமத்தை சேர்ந்தசந்துரு என்ற சைதாப்பேட்டை சந்துரு (29), சென்னை எம்ஜிஆர் நகர் சூளைப்பள்ளம் யமஹா மணி என்ற மணிவண்ணன்(26), அரக்கோணம் ஜெயபால் (63) ஆகிய3 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த ரவுடிகள் செந்தில் குமார், முத்துக்குமார் ஆகியோர் அங்குள்ள நீதிமன்றத்தில் சரணடைந்தனர்.கொலையாளிகளுக்கு கார் ஓட்டிய அரக்கோணத்தை சேர்ந்த மோகன் என்பவர் நேற்றுகைது செய்யப்பட்டார். இந்நிலையில், முக்கிய அரசியல் பிரமுகர்கள் இருவருக்குஇந்த கொலையில் தொடர்பு இருப்பதை போலீஸார் கண்டறிந்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவர்களை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர்.