

கோவை: சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த 3 பயணிகளிடம் இருந்து ரூ.2.47 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
சிங்கப்பூரில் இருந்து கோவைக்கு நேற்று ஸ்கூட் ஏர்லைன்ஸ் விமானம் வந்தது. அதில், வந்திறங்கிய 3 பயணிகளை சந்தேகத்தின் அடிப்படையில் வருவாய் புலனாய்வு இயக்குநரக (டிஆர்ஐ) அதிகாரிகள் சோதனைக்கு உட்படுத்தினர்.
சோதனையின்போது, சென்னையைச் சேர்ந்த ஜாபர் அலி (50), சாகுல் அமீது (28) ஆகிய இருவரின் பேன்ட் பாக்கெட்டுகள், உள்ளாடைகளில் தங்க கட்டிகள், நகைகளை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து மொத்தம் ரூ.2.47 கோடி மதிப்புள்ள 4.10 கிலோ தங்கம் கைப்பற்றப்பட்டது. 3 பேரில் இருவரை டிஆர்ஐ அதிகாரிகள் கைது செய்தனர்.