

தேனி: தேனி பகுதியைச் சேர்ந்த கல்லூரிமாணவி ஒருவர் போட்டித் தேர்வுக்குத் தயாராகி கொண்டிருந்தார். இதற்காக சமூக வலைதளங்களில் உள்ள குழுவில் இணைந்துள்ளார். இதில் திருவள்ளூர் மாவட்டம் மேலஅயனப்பாக்கத்தைச் சேர்ந்தயோகேஷ்குமார்(28) அறிமுகமானார்.
பின்பு மாணவியிடம் சமூக வலைதளத்தில் தனிப்பட்ட முறையில் பேசி வந்தவர் மாணவியின் புகைப்படத்தை ஆபாசமாக `மார்பிங்' செய்துள்ளார். இவற்றை வலைதளங்களில் வெளியிடாமல் இருக்க ரூ.2 லட்சம் தர வேண்டும் என்று மிரட்டியுள்ளார்.
அச்சமடைந்த மாணவி சமூகவலைதள கணக்குகளை முடக்கிவைத்தார். இருப்பினும் தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டவே தேனிமாவட்ட சைபர் கிரைம் போலீஸில்புகார் செய்தார். இதைத் தொடர்ந்துஆய்வாளர் ரங்கநாயகி வழக்கு பதிவு செய்து யோகேஷ்குமாரை கைது செய்தார்.