

சென்னை: சென்னை பாரிமுனை ஆசீர்வாதபுரத்தை சேர்ந்தவர் மகிமை ராஜ் (49). இவர், மாநகராட்சி 5-வது மண்டலத்தில் தூய்மை பணியாளராக வேலை செய்து வருகிறார். இவர் சில தினங்களுக்கு முன்னர் ஏழுகிணறு பகுதியில் பணியில் இருக்கும்போது, அங்குள்ள ஒரு வீட்டுக்குள் குளித்துக் கொண்டிருந்த பள்ளி மாணவியை செல்போன் கேமரா மூலம் வீடியோ எடுத்துள்ளார். இதைப் பார்த்து அந்த மாணவி அதிர்ச்சியடைந்து, கூச்சலிட்டார். உடனே மகிமைராஜ், அங்கிருந்து தப்பியோடினார்.
இது தொடர்பாக அந்த சிறுமியின் பெற்றோர், பூக்கடை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீஸார் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்து, மகிமைராஜை நேற்று கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.