

மும்பை: மும்பை புறநகர் கோரேகான் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார் சிங். இவரது அலுவலகத்தில் 10-15 பேர் கொண்ட கும்பல் நேற்று முன்தினம் புகுந்து ராஜ்குமார் சிங்கை துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றது.
சிவசேனா (ஷிண்டே பிரிவு) எம்எல்ஏ பிரகாஷ் சுர்வே அலுவலகத்துக்கு ராஜ்குமார் சிங் கொண்டு செல்லப்பட்டார். அங்கு பிரகாஷ் சுர்வேவின் மகன் ராஜ் சுர்வே, அவரது ஆட்கள் ராஜ்குமாரை மிரட்டி வெற்று பத்திரத்தில் கையெழுத்து வாங்கினர்.
பாட்னாவை சேர்ந்த ஒருவரிடம் ராஜ்குமார் வாங்கிய கடனைதீர்த்து வைப்பதற்காக இவர்கள்வெற்று பத்திரத்தில் கையெழுத்து பெற்றுள்ளனர். ராஜ்குமார் சிங்கை பிறகு போலீஸார் மீட்டனர். இந்நிலையில் ராஜ் சுர்வேஉள்ளிட்ட 11 பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.