

சென்னை: சென்னை புளியந்தோப்பு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளராக பணியாற்றியவர் பி.ராஜேந்திரன். இவரது நண்பர்கள் இணைந்து, வாட்ஸ்-அப் குழு வைத்துள்ளனர். அண்மையில் இந்தக் குழுவில்,ஒருவர் குறிப்பிட்ட மதம் சார்ந்த பாடலைப் பதிவிட்டுள்ளார். அதற்கு பதிலளிக்கும் வகையில், ராஜேந்திரன் வெளியிட்ட ஆடியோ பதிவு சர்ச்சைக்குரியதானது.
இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.இதுகுறித்து விசாரணைக்குப் பிறகு காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் உத்தரவின்பேரில் காவல் ஆய்வாளர் ராஜேந்திரனை பணியிடை நீக்கம் செய்து, போக்குவரத்து இணை ஆணையர் (தெற்கு) மயில்வாகனன் உத்தரவிட்டார்.