ரூ.1.88 கோடி மோசடி செய்த வழக்கில் எஃப்.எம். ரேடியோ முன்னாள் மேலாளர் கைது @ சென்னை

ரூ.1.88 கோடி மோசடி செய்த வழக்கில் எஃப்.எம். ரேடியோ முன்னாள் மேலாளர் கைது @ சென்னை
Updated on
1 min read

சென்னை: சென்னை ஏழுகிணறு போர்ச்சுகீஸ் சர்ச் தெருவைச் சேர்ந்தவர் பீர் அனீஸ் ராஜா(47). அதே பகுதியில் தனியார் பொருட்காட்சி நிறுவனம் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், தனியார் எஃப்.எம்.ரேடியோ விளம்பரப் பிரிவில் மேலாளராகப் பணியாற்றி வந்த பம்மல் விஜயராகவன் என்பவர், 2017-ல் பீர் அனீஸ் ராஜாவுக்கு அறிமுகமானார்.

அவரது பொருட்காட்சி நிறுவனத்தை, தான் பணிபுரியும் எஃப்.எம். ரேடியோவில் விளம்பரப்படுத்துவதாகவும், பல முன்னிணி நிறுவனங்களின் விளம்பர ஆர்டர்கள் தன்னிடம் இருப்பதாகவும், அதில் முதலீடு செய்தால், லாபம் தருவதாகவும் பீர் அனீஸ் ராஜாவிடம் கூறி, ரூ.1.88 கோடியை விஜயராகவன் பெற்றுள்ளார்.

ஆனால், விஜயராகவன் தனது பெயரில் போலி விளம்பர நிறுவனம் தொடங்கி,பீர் அனீஸ் ராஜாவை மோசடி செய்துள்ளார். இது குறித்து பீர் அனீஸ் ராஜா, சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸில் புகார் அளித்தார். இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீஸார், விசாரணை நடத்தினர். விசாரணையில், விஜயராகவன் மோசடி செய்தது உறுதி செய்யப்பட்டது.

இதற்கிடையில், அவர் பணிபுரிந்த எஃப்.எம். ரேடியோ நிறுவனம், அவரை பணியிலிருந்து நீக்கியதாக தெரிகிறது. இந்நிலையில், பல்லாவரத்தில் தலைமறைவாக இருந்த விஜயராகவனை நேற்று முன்தினம் போலீஸார் கைது செய்து, புழல் மத்திய சிறையில் அடைத்தனர். மேலும், இந்த மோசடிக்கு உடந்தையாக இருந்த விஜயராகவன் மனைவி தீபா உள்ளிட்ட 4 பேரை போலீஸார் தேடி வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in