

சென்னை: மாதவரம் பால்பண்ணை பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (42). பெயின்டரான இவர், நேற்று முன்தினம் இரவு திருவொற்றியூர் காங்காடு சந்திப்பில் குப்பைமேடு அருகே நிறுத்தப்பட்ட லாரி முன்பு படுத்து தூங்கினார். மது போதையில் அவர் தூங்கியதாக கூறப்படுகிறது. இதை கவனிக்காத ஓட்டுநர் லாரியை இயக்கினார். இதில், உடல் நசுங்கி சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த ஓட்டுநர், லாரியை அங்கேயே நிறுத்திவிட்டு ஓடிவிட்டார். விபத்து குறித்து தகவல் அறிந்து வந்த வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார்,சதீஷ்குமார் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், விபத்தை ஏற்படுத்திவிட்டு தலைமறைவான லாரி ஓட்டுநரை தனிப்படை அமைத்து தேடி வருகின்றனர். தொடர்ந்து விசாரணை நடக்கிறது.