

அரக்கோணம்: நெமிலி அருகே பெண் ஊராட்சி மன்றத் தலைவர் கிணற்றில் இருந்து உயிரி ழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். அவர், தற் கொலை செய்து கொண் டாரா? என காவல் துறை யினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கீழ்வெண்பாக்கம் ஊராட்சி சுந்தரவிநாயகர் கோயில் தெருவைச் சேர்ந்தவர் முருக வேல் (52), விவசாயி. இவரது மனைவி மாலதி (45). இவர், கீழ்வெண்பாக்கம் ஊராட்சி மன்றத்தலைவராக பதவி வகித்து வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு தம்பதிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், மனமுடைந்த மாலதி வீட்டை விட்டு வெளியில் சென் றார். நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை என கூறப்படுகிறது. வீட்டில் இருந்தவர்கள் அவரை பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.
இதற்கிடையே, நேற்று காலை வீட்டின் பின்பக்கம் உள்ள கிணற்றில் மாலதி உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டார். இதுகுறித்து ஊராட்சி மன்றத் தலைவரின் கணவர் முருகவேல் நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில், காவல் துறையினர் விரைந்து வந்து மாலதியின் உடலை மீட்டு பிரேதப்பரிசோதனைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து காவல் துறை யினர் வழக்குப்பதிவு செய்து மாலதி கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தாரா? குடும்ப பிரச்சினை காரண மாக தற்கொலை செய்து கொண்டாரா? என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.