

விருதுநகர்: விருதுநகரை தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வந்த நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மீது மேலும் 30 பேர் போலீஸில் புகார் மனு அளித்தனர்.
நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மீதான மோசடி புகார் குறித்து, மதுரை மாவட்ட பொருளாதார குற்றப் பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், விருதுநகர் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோர் புகார் அளிக்க மாவட்ட ஆயுதப் படை மைதானத்தில் நேற்று சிறப்பு முகாம் நடத்தப்பட்டது.
பொருளாதார குற்றப் பிரிவு தென்மண்டல எஸ்பி மெகலினா ஐடன் தலைமையில், மதுரை டிஎஸ்பி குப்புசாமி, விருதுநகர் இன்ஸ்பெக்டர் நாக லட்சுமி ஆகியோர் புகார் மனுக்களைப் பெற்றனர். இதில், விருதுநகர் மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 30 பேர் நியோ மேக்ஸ் நிறுவனத்தின் மீது ரூ.4 கோடி அளவுக்கு மோசடிப் புகார்களை அளித்தனர்.