பாமக நகரச் செயலாளர் கொலை வழக்கில் 6 பேர் கைது: செங்கை நகர போலீஸார் தீவிர விசாரணை

பாமக நகரச் செயலாளர் கொலை வழக்கில் 6 பேர் கைது: செங்கை நகர போலீஸார் தீவிர விசாரணை
Updated on
1 min read

செங்கல்பட்டு: செங்கல்பட்டில் பாமக நகரச் செயலாளர் நாகராஜ் கொலை வழக்கில் 6 பேரை கைது செய்து செங்கல்பட்டு நகர போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

செங்கல்பட்டு பாமக நகர செயலாளர் பூக்கடை நாகராஜ் என்பவரை கடந்த 1-ம் தேதி 7 பேர் கொண்ட மர்ம கும்பல் வெட்டி கொலை செய்து விட்டு தப்பியோடியது. இந்த சம்பவம் தொடர்பாக செங்கல்பட்டு நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

இதனை தொடர்ந்து நாகராஜ் கொலை வழக்கில் அஜெய் (எ) சிவ பிரசாத் என்பவரை கொலை நடந்த அன்றே போலீஸார் காலில் சுட்டு பிடித்தனர். அதைத் தொடர்ந்து கார்த்திக் என்பவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து மற்றவர்களை போலீஸார் தேடி வந்தனர்.

இந்நிலையில் நேற்று முன் தினம் அதிகாலை செங்கல்பட்டு அருகே காட்டுப்பகுதியில் தங்கிருந்த செங்கல்பட்டு நாசர் தெரு முனியன் என்பவரது மகன் சூர்யா (21), கெங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்த கருப்பைய்யா மகன் மாரி, பச்சையம்மன் கோயில் தெருவை சேர்ந்த ராஜீ என்பவரது மகன் தினேஷ் (20), செங்கல்பட்டு அடுத்த காவூர் பகுதியை சேர்ந்த முனுசாமி மகன் விஜயகுமார் (28) என்கிற காவூர் விஜி ஆகிய நான்குபேரை காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து ரகசிய இடத்தில் வைத்து கொலைக்கான காரணம் குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் இந்த கொலை வழக்கில் இன்னும் சில நபர்கள் தலைமறைவாக உள்ளனர் என்று காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in