வடலூரில் பூட்டியிருந்த வீட்டில் 103 பவுன் நகை கொள்ளை

வடலூரில் பூட்டியிருந்த வீட்டில் 103 பவுன் நகை கொள்ளை
Updated on
1 min read

விருத்தாசலம்: கடலூர் மாவட்​டம் வடலூர் நாகேசன் நகரைச் சேர்ந்​தவர் வேலா​யுதம் (71). இவர் வெளி​நாட்​டில் வேலை செய்​யும் தனது மகனை பார்ப்​ப​தற்​காக கடந்த 8-ம் தேதி வெளி​நாடு சென்​றார்.

இதையடுத்து வடலூர் பார்​வ​திபுரத்தை சேர்ந்த வேலா​யுதத்​தின் சகோ​தரர் மனைவி பூங்​காவனம் என்​பவர், நாகேசன் நகரில் உள்ள வேலா​யுதத்​தின் வீட்​டில் இரவில் மட்​டும் பாது​காப்​புக்​காக தங்​கி​யிருந்​தார்.

இந்​நிலை​யில் நேற்று முன்​தினம் பூங்​காவனம் வேலைக்குச் சென்​று​விட்​டு, இரவு 8 மணி அளவில் வேலா​யுதத்​தின் வீட்​டுக்குச் சென்​றார். அப்​போது வீட்​டின் முன்​புற மின் விளக்கு அணைக்​கப்​பட்டு இருந்​தது.

இதனால் அச்​சமடைந்த பூங்​காவனம் அக்​கம்​பக்​கத்​தினரை அழைத்து வந்து வீட்​டுக்​குள் சென்​ற​போது, வீட்​டின் படுக்​கையறை​யில் இருந்த பீரோக்​கள் மற்​றும் பின்​புற கதவு உடைக்​கப்​பட்​டிருந்​ததைக் கண்டு அதிர்ச்​சி​யடைந்​தார்.

இதையடுத்து தஞ்​சாவூரில் வசிக்​கும் வேலா​யுதத்​தின் மகள் சவுந்​தர்​யா​வுக்கு (39) தகவல் கொடுத்​தார். அவர் வடலூர் காவல் நிலை​யத்​தில் புகார் அளித்​தார். அதில், பீரோ​வில் இருந்த 103 பவுன் நகை மற்​றும் ரூ.6 லட்​சம் ரொக்​கம் கொள்ளை போன​தாக குறிப்​பிட்​டுள்​ளார்.

தகவலறிந்த கடலூர் எஸ்பி ஜெயக்​கு​மார் சம்பவ இடத்தை பார்​வை​யிட்டு விசா​ரணை நடத்​தினர். தொடர்ந்து, மர்ம நபர்​களை பிடிக்க, நெய்​வேலி டிஎஸ்பி பால​கிருஷ்ணன் தலை​மை​யில் 5 தனிப்​படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்​ளை​போன நகை​ யின் மதிப்பு ரூ.1 கோடியே 23 லட்​சம்​ என கணக்​கிடப்​பட்​டுள்​ளது.

வடலூரில் பூட்டியிருந்த வீட்டில் 103 பவுன் நகை கொள்ளை
ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயிலில் பிரசாத லட்டு வழங்கியதில் ரூ.3.40 கோடி முறைகேடு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in