Published : 24 Jun 2023 07:09 AM
Last Updated : 24 Jun 2023 07:09 AM
சிவகாசி: சிவகாசி சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகரிக்கும் போதைப் பொருள் விற்பனையால் பள்ளி, கல்லூரி மாணவர்கள் போதைக்கு அடிமையாகி வருகின்றனர்.
சிவகாசி சுற்று வட்டாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் உள்ளது. இங்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து மாணவர்கள் படிக்கின்றனர். சமீப காலமாக பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து கஞ்சா, போதை மாத்திரை உள்ளிட்ட போதைப் பொருட்கள் விற்பனை அதிகரித்துள்ளது.
அதிலும் குறிப்பாக பள்ளி மாணவர்கள் எளிதில் போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருகின்றனர். சிவகாசி புறநகர் பகுதியில் மாணவர்கள் சிலரை போதைக்கு அடிமையாக்கி, கஞ்சா விற்பனைக்கு பயன்படுத்திய நபரை போலீஸார் சமீபத்தில் கைது செய்தனர்.
இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு, சிவகாசி நகர் பகுதியில் பள்ளி மாணவர் ஒருவர் சாலையில் மயங்கி விழுந்து கிடந்தார். அவரை அப்பகுதி மக்கள் மீட்டு, தனி யார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சையில் அந்த மாணவர் போதை மாத்திரை பயன்படுத்தியது தெரியவந்தது.
இதுகுறித்து அந்த மாணவரிடம் விசாரித்ததில் மாண வர்கள் குழுவாக போதை மாத்திரை பயன்படுத்தியது தெரிய வந்தது. இதுபோன்ற தொடர் சம்பவங்களால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் பள்ளி, கல்லூரிகளுக்கு அருகில் செயல்படும் கடைகளில் போலீஸார் மற்றும் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் தீவிர சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT