மாநகராட்சி ஆணையர் மீது புகார் - திண்டுக்கல், காஞ்சியில் லஞ்ச ஒழிப்பு சோதனை

மாநகராட்சி ஆணையர் மீது புகார் - திண்டுக்கல், காஞ்சியில் லஞ்ச ஒழிப்பு சோதனை
Updated on
1 min read

திண்டுக்கல்/காஞ்சிபுரம்: திண்டுக்கல் மாநகராட்சி ஆணையராக ஆர்.மகேஸ்வரி கடந்த 3 மாதங்களுக்கு முன்பு பொறுப்பேற்றார். இவர், திண்டுக்கல் ஆர்.எம். காலனியில் உள்ள வீட்டில் வசித்து வருகிறார். நேற்று காலை லஞ்ச ஒழிப்புத் துறை டிஎஸ்பி நாகராஜன் தலைமையிலான 6 பேர் கொண்ட குழுவினர் மகேஸ்வரி வீட்டுக்குச் சென்று சோதனையில் ஈடுபட்டனர்.

2020-2021-ம் ஆண்டில் காஞ்சிபுரம் நகராட்சி ஆணையராக ஆர்.மகேஸ்வரி பணிபுரிந்தார். அப்போது, கரோனா பரவல் தடுப்பு சுகாதாரப் பணிகளுக்காக பொருட்கள் வாங்கியதில் ரூ.32 லட்சம் முறைகேடு நடந்ததாக காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சுடர்மணி, லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸில் புகார் தெரிவித்தார். இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

அந்த வழக்கு தொடர்பாக நேற்று மகேஸ்வரியின் வீட்டில் லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் சோதனை நடத்தியதாகக் கூறப்படுகிறது. நேற்று காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை, மாலை 4 மணி வரை நீடித்தது.

காஞ்சிபுரத்தில்...: திண்டுக்கல்லில் நடந்த சோதனையின் ஒருபகுதியாக, காஞ்சிபுரம் மாவட்டம் களக்காட்டூரில் துப்புரவு ஆய்வாளர் ரமேஷ்குமார் வீட்டிலும், திருக்காளிமேட்டில் இளநிலை உதவியாளராக இருந்த சந்தைவெளி என்ற ஊழியர் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை நடத்தினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in