போதை தடுப்பு அதிகாரி எனக் கூறி அமெரிக்கர்களிடம் இருந்து ரூ.165 கோடி மோசடி: 4 பேர் கைது

கோப்புப்படம்
கோப்புப்படம்
Updated on
1 min read

புதுடெல்லி: இந்தியா, அமெரிக்கா, உகாண்டா ஆகிய நாடுகளில் கால் செண்டர் அமைத்து, அதன் மூலம் அமெரிக்க குடிமக்களை சிலர் ஏமாற்றி வந்துள்ளனர். அந்த மோசடி நபர்கள் தங்களை அமெரிக்க வருவாய் துறை, போதைப் பொருள் தடுப்பு உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள் எனக் கூறி, அமெரிக்க குடிமக்களிடம் இணையம் வழியாக பணம் பறித்து வந்துள்ளர்.

இந்த மோசடி நீண்ட நாட்களாக நடைபெற்று வந்த நிலையில், இதில் ஈடுபடுபவர்களை கண்டுபிடிக்கும் நோக்கில் டெல்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு, அமெரிக்க புலனாய்வு அமைப்பான எப்பிஐயுடன் இணைந்து விசாரனை நடத்தி வந்தது.

குஜராத்தைச் சேர்ந்த பரத் அர்மார்கார் (28) மற்றும் வட்சால் மேத்தார் (29), டெல்லியைச் சேர்ந்த தீபக் அரோரா (45) மற்றும் பிரசாந்த் குமார் (45) ஆகிய நால்வர் இந்தியா மற்றும் உகாண்டாவில் உள்ள கால் செண்டர் மூலமாக இந்த மோசடியில் ஈடுபட்டு வந்தது தெரியவந்தது.

இந்நிலையில், கடந்த வெள்ளி மற்றும் சனி ஆகிய இரு நாட்களில் டெல்லி சிறப்பு காவல் பிரிவு அதிரடி தேடுதல் வேட்டை நடத்தியது. இதில், நீண்ட நாட்களாக தேடப்பட்டு வந்த இந்த நால்வரை போலீசார் கைது செய்தனர். இவர்கள் அமெரிக்கர்களிடமிருந்து ரூ.165 கோடிக்கு மேல் மோசடி செய்திருப்பதாக டெல்லி சிறப்பு காவல் பிரிவு ஆணையர் தலிவால் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in