Published : 12 Jun 2023 07:08 AM
Last Updated : 12 Jun 2023 07:08 AM
சென்னை: சென்னை அயனாவரம் வசந்தா கார்டன் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சுகுமார் (51). இவர், தனது மனைவி லதா (44), மகன் விக்னேஷ் (24) ஆகியோடன் வசித்துவந்தார். சுகுமார் தனியார் நிறுவனத்தில் காவலாளியாக வேலை செய்து வந்தார். மதுப் பழக்கத்துக்கு அடிமையான இவர், தினமும் குடித்துவிட்டு மனைவி, மகனிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிது.
இந்நிலையில், கடந்த 9-ம் தேதி அதிகாலை வீட்டின் படுக்கை அறையில் சுகுமார் மயங்கிக் கிடந்தார். அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சுகுமார் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பிரேத பரிசோதனையில், சுகுமார் உடலில் காயம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து இயற்கைக்கு மாறான மரணம் என்ற பிரிவின்கீழ் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர். சுகுமாரின் மனைவி, மகனை அழைத்து தனித்தனியாக விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில்அளித்தனர்.
போலீஸார் தீவிரமாகவிசாரித்ததில், ஓட்டேரி நம்மாழ்வார்பேட்டையை சேர்ந்த உறவினரான சதீஷ் (23) என்பவருடன் சேர்ந்து தந்தையை கொலை செய்ததை விக்னேஷ் ஒப்புக்கொண்டார். இதையடுத்து, விக்னேஷ், சதீஷ் இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
போலீஸாரிடம் விக்னேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது; மதுப் பழக்கத்துக்கு அடிமையான எனது தந்தை, தினமும் குடித்துவிட்டு வீட்டில் ரகளை செய்வார்.
சம்பவத்தன்றும் மது குடித்து விட்டுவந்து தாயிடம் தகராறு செய்துள்ளார். இதுபற்றி என் தாய் போன் மூலம் எனக்கு தெரிவித்தார். கோபத்தில் வீட்டுக்கு வந்ததும், தந்தையை கண்டித்தேன். என்னிடமும் தகராறுசெய்ததால், அவரது தலையை பிடித்து இரும்பு கிரில் கதவில் பலமாக இடித்தேன்.
பின்னர், சதீஷ்உதவியுடன் துணியால் கழுத்தை இறுக்கி கொன்றேன்.அவர் போதையில் இறந்துவிட்டதாக மற்றவர்களை நம்ப வைக்க நினைத்தோம். ஆனால், போலீஸார் உண்மையைகண்டறிந்து எங்களை கைது செய்துவிட்டனர். இவ்வாறு வாக்குமூலத்தில் விக்னேஷ் கூறியுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT