சென்னை | போலி பாஸ்போர்ட், விசா தயாரித்த வழக்கில் தலைமறைவாக இருந்த தெலங்கானா மாநில டிராவல்ஸ் ஏஜென்ட் கைது

அகமது அலிகான்
அகமது அலிகான்
Updated on: 
1 min read

சென்னை: சென்னை மண்டல வருவாய் புலனாய்வு இயக்குநரகத்தின் உதவி இயக்குநர் கடந்த மாதம் 19-ந்தேதி சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸாரிடம் புகார் மனு அளித்தார். அதில், சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்த முகமது ஷேக்இலியாஸ் என்பவர் பாஸ்போர்ட் மற்றும் விசா போன்ற ஆவணங்களை போலியாக தயாரித்து வருவதாக கூறியிருந்தார்.

அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி முகமது ஷேக் இலியாசை கடந்த மாதம் 20-ம்தேதி கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த வழக்கில் மேலும் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர் விசாரணையில் ஜதராபாத்தை சேர்ந்த டிராவல்ஸ்ஏஜென்ட் அகமது அலிகான் (42) என்பவர்தான் முக்கிய குற்றவாளி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் தனிப்படை போலீஸார் தலைமறைவாக இருந்த அகமது அலிகானை அதிரடியாக கைது செய்தனர்.

விசாரணையில் அவர், மும்பை மற்றும் ஐதராபாத்தில் கடந்த 8 ஆண்டுகளாக டிராவல்ஸ் ஏஜென்சி நடத்தி வருவதும், இதன் மூலம் வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்பி வைக்க சுமார் 150 போலி பாஸ்போர்ட்கள், விசா ஸ்டாம்பிங் செய்து பணம்பெற்று மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளதும் தெரியவந்தது. விசாரணைக்கு பின்னர், அகமது அலிகான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in