சென்னை | இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்றவரிடம் பணம் பறிப்பு: 3 இளைஞர்கள் கைது

சென்னை | இரவு நேரத்தில் சாலையில் நடந்து சென்றவரிடம் பணம் பறிப்பு: 3 இளைஞர்கள் கைது
Updated on
1 min read

சென்னை: சென்னை, கொருக்குப்பேட்டை, ஜே.ஜே.நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார் (29). இவர் கடந்த 5-ம் தேதி இரவு தனது நண்பரின் வீட்டு விசேஷத்தில் கலந்து கொள்வதற்காக சென்றார். பின்னர், நிகழ்ச்சி முடிந்து வீட்டுக்கு திரும்பி செல்ல நள்ளிரவு 1 மணியளவில் தண்டையார்பேட்டை, வைத்தியநாதன் பாலம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார்.

அப்போது அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர் பிரவீன்குமாரை வழிமறித்து நின்றனர். தொடர்ந்து அவர்கள் பிரவீன்குமாரை மிரட்டியும், கைகளால் தாக்கியும் தகராறில் ஈடுபட்டனர்.

பின்னர் அவர்வைத்திருந்த ரூ.1,500-ஐ பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டனர். இது தொடர்பாக ஆர்.கே.நகர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.

விசாரணையின் அடிப்படையில், தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட புது வண்ணாரப்பேட்டையை சேர்ந்த ஆகாஷ் (22), சஞ்சய் (23), வேலன் (20) ஆகியோரை போலீஸார் நேற்று கைது செய்தனர்.

மேலும் அவர்களிடமிருந்து ரூ.1,500 மற்றும்குற்றச்செயலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர். இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஆகாஷ் மீது ஏற்கெனவே 2 குற்ற வழக்குகளும், சஞ்சய் மீது 4 குற்ற வழக்குகளும் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in