கன்னியாகுமரி | ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.1 கோடி இழந்தவர் தற்கொலை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

நாகர்கோவில்: கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோடு அருகேயுள்ள மார்த்தாண்டம்துறை கோவில்விளாகம் பகுதியைச் சேர்ந்தவர் ஹவுசேப்பு மகன் தேவதாசன் (40). இவர் கோவையில் தங்கியிருந்து, திரைப்படத் துறையில் பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், ஆன்லைன் சூதாட்டத்துக்கு தேவதாசன் அடிமையானார். கடந்த 3 மாதங்களுக்கு முன் குடும்பத்துடன் சொந்த ஊர் திரும்பிய அவர், ஆன்லைன் சூதாட்டத்தால் ரூ.1.10 கோடி இழந்துவிட்டதாக குடும்பத்தினரிடமும், உறவினர்களிடமும் தெரிவித்துள்ளார். ஆனாலும், தொடர்ந்து ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

பணத்தை இழந்த வேதனையாலும், ஆன்லைன் சூதாட்டத்தைக் கைவிட முடியாததாலும் மன வேதனையில் இருந்த தேவதாசன், நேற்று முன்தினம் மாலை வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். கொல்லங்கோடு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in