புதுச்சேரி | திருமண வரவேற்பில் மது விநியோகம்: 3 பேருக்கு அபராதம்

புதுச்சேரி | திருமண வரவேற்பில் மது விநியோகம்: 3 பேருக்கு அபராதம்

Published on

புதுச்சேரி: புதுவையில் நடைபெற்ற ஒரு திருமண வரவேற்பு நிகழ்ச்சியில், உறவினர்கள், நண்பர்களுக்கு மணமகள் வீட்டார் வழங்கிய தாம்பூலப் பையில் தேங்காய், பழம், வெற்றிலைப் பாக்குடன் மது பாட்டிலும் சேர்த்து வழங்கப்பட்டது. பெண்ணின் தாய்மாமன் அளித்த இந்த பரிசால் சர்ச்சைகள் கிளம்பின. மேலும், இது சமூகவலை தளங்களில் வைரலானது.

இது தொடர்பாக புதுச்சேரி கலால் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், மதுபானம் விற்ற கடையின் காசாளர், மண்டப மேலாளர், மணமகளின் உறவினர் ஆகியோருக்கு கலால் துறை அதிகாரிகள் நேற்று ரூ.50 ஆயிரம் அபராதம்விதித்தனர். “முழுமையானவிசாரணைக்குப் பிறகே யார் மீது தவறு உள்ளது, யாரிடம் அபராதத் தொகையை வசூலிப்பது என்று முடிவு செய்யப்படும்” என்று கலால் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in