வங்கி மோசடி வழக்கு | தனியார் நிறுவன முன்னாள் சிஇஓ உள்ளிட்ட 6 பேருக்கு சிறை: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

வங்கி மோசடி வழக்கு | தனியார் நிறுவன முன்னாள் சிஇஓ உள்ளிட்ட 6 பேருக்கு சிறை: சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
Updated on
1 min read

சென்னை: வங்கி மோசடி வழக்கில் தனியார்நிறுவன முன்னாள் சிஇஓ உள்ளிட்ட 6 பேருக்கு சிறைத் தண்டனை விதித்து சென்னை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.

சென்னையைச் சேர்ந்த `பல்பேப் இச்நிச்சி' மென்பொருள் நிறுவன முன்னாள் தலைமை செயல் அதிகாரியான பி.செந்தில்குமார், எஸ்ஜெஎஸ் நிறுவன இயக்குநர்கள் டி.ஆர்.தனசேகர், கருணாநிதி மற்றும் ஜெ.முரளி, லதா பாஸ், செந்தில்குமார் ஆகியோர் கடந்த 2008-ம் ஆண்டு போலி ஆவணங்கள் மூலம், இந்தியன் வங்கியில் கோடிக்கணக்கில் கடன்பெற்று, முறைகேடு செய்ததாகப் புகார்கள் எழுந்தன.

இதன் மூலம் வங்கிக்கு ரூ. 4.19 கோடி இழப்பு ஏற்படுத்தியதாகக் கூறி, சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இந்த வழக்கை விசாரித்த சிபிஐ வழக்குகளுக்கான எழும்பூர் கூடுதல் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட பல்பேப் இச்நிச்சி மென்பொருள் நிறுவன முன்னாள் சிஇஓ பி.செந்தில்குமாருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனை மற்றும் ரூ.1.25 லட்சம் அபராதம் விதித்தார்.

அபராதம் விதிப்பு: மேலும், மற்ற அனைவருக்கும் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை மற்றும் தலா ரூ.1.25 லட்சம் அபராதம் மற்றும் இரு நிறுவனங்களுக்கும் தலா ரூ.1 லட்சம் அபராதம் விதித்து தீர்ப்பு அளித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in