Published : 02 Jun 2023 07:49 AM
Last Updated : 02 Jun 2023 07:49 AM

மதுராந்தகம் | பறிமுதல் வாகனத்தை பயன்படுத்தி வந்த சித்தாமூர் காவல் நிலைய சிறப்பு எஸ்ஐ பணியிடை நீக்கம்

மதுராந்தகம்: சித்தாமூர் காவல் நிலையத்தில் தனிப்பிரிவின் சிறப்பு உதவி ஆய்வாளராகபக்தவச்சலம் என்பவர் பணிபுரிந்துவந்தார். இவர், கடந்த பல ஆண்டுகளாக இங்கு பணிபுரிந்து வருவதாக தெரிகிறது.

இந்நிலையில், கடந்த 2018-ம்ஆண்டு ஜமீன் எண்டத்தூர் பகுதியைசேர்ந்த சிவபாலன் என்பவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது முதுகரை பகுதியில் விபத்துக்கு உள்ளானதாகவும், இதில், எதிரே வந்த நபர்பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.

இதையடுத்து, இந்த விபத்துதொடர்பாக சித்தாமூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து சிவபாலனிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும், காவல் நிலைய பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், விபத்தில் சிக்கியஇருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், விபத்தில் சிக்கியவாகனத்தை பக்தவச்சலம், வேறு வாகனத்தின் பதிவெண் பொறுத்தி கடந்த4 ஆண்டுகளாக பயன்படுத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, சிபிசிஐடிபோலீஸார் மேற்கண்ட காவல் நிலையம் உட்பட கிராமப் பகுதிகளிலும் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும்,சிவபாலனும் தனது வாகனத்தை அடையாளம் கண்டதால் புகார் அளிக்கக்கூடும் என்ற அச்சத்தில், பக்தவச்சலம் வாகனத்தை காவல் நிலையத்தில் நிறுத்திவிட்டு, சிவபாலனிடம் வாகனத்தை எடுத்துச் செல்லுமாறு கூறியுள்ளார். மேலும், மருத்துவ விடுப்பில் சென்றதாகவும் தெரிகிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக உதவி ஆய்வாளர் பக்தவச்சலத்தை மாவட்ட எஸ்பி சாய் பிரனீத் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x