கோட்டக்குப்பம் அருகே பறிமுதல் செய்யப்பட்ட போதை பவுடர் என்ன வகை? - மாநில அளவிலான சோதனைக்கு அனுப்பி வைப்பு

கோட்டக்குப்பம் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட போதை பவுடர்.
கோட்டக்குப்பம் போலீஸாரால் கைப்பற்றப்பட்ட போதை பவுடர்.
Updated on
1 min read

விழுப்புரம்: புதுச்சேரியில் இருந்து வெளி மாநிலங்களுக்கு மதுபானம், போதைப் பொருட்கள் கடத்திச் செல்வதை தடுக்க விழுப்புரம் மாவட்டத்தில் 9 மதுவிலக்கு சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. அண்மையில் புதுச்சேரி அருகே சின்ன முதலியார்சாவடி சோதனைச்சாவடியில் கோட்டக் குப்பம் மதுவிலக்கு உதவி காவல் சார்பு ஆய்வாளர் இளங்கோ தலைமையில் போலீஸார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது புதுச்சேரியிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற தமிழக அரசுப் பேருந்தில் சோதனைசெய்தனர். அப்போது பையுடன்

அமர்ந்திருந்த 50 வயது மதிக்கத்தக்க ஒருவர் பேருந்தைவிட்டு இறங்கி பையுடன் ஓடினார். அவரைபோலீஸார் விரட்டிப் பிடித்து, அவரிடம் இருந்து பாலித்தீன் பையில் கட்டப்பட்ட 5 பொட் டலங்களில் இருந்து பவுடரை பறிமுதல் செய்தனர்.

விசாரணையில், நாகப்பட்டி னத்தைச் சேர்ந்த அலிதுல்லா (55) என்பது தெரியவந்தது. மேலும், சென்னைக்கு கொண்டு செல்லும்போது வழியில் ஒருவர் அந்த பவுடரை பெற்றுக்கொள்வார் என முன்பின் அறிமுகம் இல்லாத நபர் கொடுத்ததாகவும், இதனை உரியவரிடம் கொடுக்கும்போது அவர் கணிசமாக பணம் கொடுப்பார் என்றும் கூறியதாக தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீஸார் போதை பவுடரை ஆய்வகத்திற்கு அனுப்பி வைத்தனர்.

ஆய்வு முடிவு தொடர்பாக காவல்துறை வட்டாரங்களில் கேட்டபோது, “எங்களிடம் உள்ள 7 வகையான போதை பொருட்களை ஒப்பீடு செய்து பார்த்ததில் எதனுடனும் இந்த பவுடர் ஒத்துப் போகவில்லை. எனவே மாநில அளவிலான சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அங்கும் இது ஒத்துப்போகவில்லை என்றால், தேசிய அளவிலான சோதனைக்கு அனுப்பப்படும். அங்கும் இதற்கான முடிவு தெரியவில்லை என்றால் அதன் பின்னர் பவுடரில் எந்த அளவுக்கு போதை தரக்கூடிய ரசாயணம் உள்ளது என ஆய்வு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் விசாரணை தொடங்கும்.

பிடிபட்ட நபரிடம் (குருவியிடம்) முதற்கட்ட விசாரணையை தொடங்கியுள்ளோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கடலூர் மாவட்டம் புதுப்பேட்டை கடற்கரையோரம் மூட்டை ஒன்று கரை ஒதுங்கியது. அதில் இதேபோல போதை பவுடர் பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டு, ஆய்வுக்கு அனுப் பப்பட்டதில் அந்த பவுடர் ஒரு கிராம் ரூ.50 ஆயிரம் என தெரியவந்தது.

நாங்கள் பறிமுதல் செய்தது சுமார் 10 கிலோ இருக்கும். அதுபோல தற்போது கைப்பற்றப்பட்ட 1,800 கிராம் பவுடர் மதிப்பு வாய்ந்ததாகவும் இருக்கலாம் அல்லது ஏதோ ஒன்றை எங்களிடம் பிடிபட வைத்து போலீஸாரை திசைத் திருப்பி, பெரிய அளவிலான கடத்தலுக்கும் வழி வகுத்திருக்கலாம்” என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in