

புதுடெல்லி: நாட்டில் கரோனா வைரஸ் பாதிப்பு தொடர்பான புள்ளிவிவரத்தை மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று காலையில் புதுப்பித்தது.
இதன்படி நாட்டில் கரோனா தொற்றுக்கு நேற்று முன்தினம் மேலும் 24 பேர் உயிரிழந்தனர். குஜராத்தில் அதிகபட்சமாக 6, உத்தரபிரதேசத்தில் 4, டெல்லி மற்றும் ராஜஸ்தானில் தலா 3, தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா, ஜார்க்கண்ட், இமாச்சல பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் பிஹாரில் தலா 1 என மொத்தம் 24 பேர் உயிரிழந்தனர்.
நாட்டில் புதிதாக 9,111 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இது முந்தைய நாள் பதிவை விட (10,093) சற்று குறைவாகும்.
இதற்கு குறைந்த பரிசோ தனை காரணமாக கூறப்படுகிறது. என்றாலும் பாசிட்டிவ் விகிதம் 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.