

சென்னை: தமிழகத்தில் தினசரி கரோனா தொற்று பாதிப்பு 100-ஐ நெருங்கியுள்ளது.
தமிழகத்தில் நேற்று ஆண்கள் 51, பெண்கள் 46 என மொத்தம் 97பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் 25 பேருக்கும், கோவையில் 21 பேருக்கும், செங்கல்பட்டில் 15 பேருக்கும் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
குவைத்தில் இருந்து வந்தஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 35 லட்சத்து 96,110 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 35 லட்சத்து 57,478 பேர் குணமடைந்துள்ளனர். நேற்று மட்டும் 64 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். தமிழகம் முழுவதும் 582 பேர் சிகிச்சையில் உள்ளனர். நேற்று உயிரிழப்பு இல்லை என்று தமிழக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.