

சென்னை: தமிழகத்தில் 4 மாதங்களுக்கு பிறகு கரோனா பாதிப்பு நேற்று மீண்டும் ஆயிரத்தை தாண்டியது.
இதுதொடர்பாக சுகாதாரத் துறைவெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நேற்று ஒரே நாளில்22,757 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், 510 ஆண்கள், 553 பெண்கள் என 1,063பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதில் துபாயில் இருந்து வந்த ஒருவர், மகராஷ்டிராவில் இருந்துவந்த ஒருவர், 12 வயதுக்கு உட்பட்ட50 குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்ட 199 முதியோர்கள் அடங்குவர். அதிகபட்சமாக சென்னையில் 497 பேர், செங்கல்பட்டில் 190 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் இதுவரை 6.58 கோடிபேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டு, 34.64 லட்சம் பேருக்குகரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
சென்னையில் அதிகபட்சமாக 2,472, செங்கல்பட்டில் 948, திருவள்ளூரில் 273, கோவையில் 264 எனமொத்தமாக தமிழகம் முழுவதும் 5,174 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் 113 பேர் ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கையிலும், 153 பேர் சாதாரண படுக்கையிலும், 18 பேர் தீவிர சிகிச்சை பிரிவிலும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர். மற்றவர்கள் வீட்டுத் தனிமையில் உள்ளனர்.
தமிழகத்தில் நேற்று 567 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நேற்று உயிரிழப்பு இல்லை.
தமிழகத்தில் கடந்த பிப்.19-ம்தேதி கரோனா பாதிப்பு 1,051 ஆக இருந்தது. பின்னர் படிப்படியாக குறைந்த பாதிப்பு எண்ணிக்கை 123 நாட்களுக்கு பிறகு நேற்று 1,063 ஆக உயர்ந்துள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.