18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி - மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி

18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கோர்பேவாக்ஸ் பூஸ்டர் தடுப்பூசி - மருந்து கட்டுப்பாட்டு ஆணையம் அனுமதி
Updated on
1 min read

புதுடெல்லி: நாட்டில் கோவிஷீல்டு, கோவாக்சின், ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசிகள் பயன்பாட்டில் உள்ள நிலையில், ஹைதராபாத்தை சேர்ந்த பயாலஜிக்கல்-இ நிறுவனம், அமெரிக்காவை சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து கோர்பேவாக்ஸ் என்ற தடுப்பூசியை கண்டுபிடித்துள்ளது.

இந்த கோர்பேவாக்ஸ் தடுப்பூசி தற்போது 5 முதல் 14 வயது வரையிலானோருக்கு செலுத்தப்படுகிறது. இந்நிலையில், பூஸ்டர் டோஸாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை 18-வயதுக்கு மேற்பட்டவர்களும் செலுத்திக்கொள்ள இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

கோவாக்சின் அல்லது கோவிஷீல்டு தடுப்பூசியின் 2 டோஸ்களையும் செலுத்தி 6 மாதங்கள் கடந்தவர்கள் பூஸ்டர் டோஸாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்.

இதுகுறித்து பயாலஜிக்கல்-இ நிறுவன நிர்வாக இயக்குநர் மஹிமா தட்லா கூறும்போது, “பூஸ்டர் டோஸாக கோர்பேவாக்ஸ் தடுப்பூசியைச் செலுத்திக் கொள்ளமத்திய அரசு ஒப்புதல் வழங்கியதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம். இது இந்தியாவில் கரோனா பூஸ்டர் டோஸ்களின் தேவையை நிவர்த்தி செய்யும்.இந்த ஒப்புதலானது, கோர்பேவாக்ஸின் நீடித்த உலகத்தரம் வாய்ந்த பாதுகாப்புத் தரங்கள் மற்றும் உயர் நோயெதிர்ப்புத் திறனை மீண்டும் ஒரு முறை பிரதிபலித்துள்ளது’’ என்று தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in