Published : 25 May 2022 07:22 AM
Last Updated : 25 May 2022 07:22 AM

15- 18 வயது பிரிவில் 80 சதவீதம் பேருக்கு முதல் டோஸ் தடுப்பூசி

புதுடெல்லி: மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் நேற்று வெளியிட்ட பதிவுகளில் கூறியிருப்பதாவது:

உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டம் இந்தியாவில் செயல்படுத்தப்படுகிறது. 15 முதல் 18 வயது வரையிலான சிறாரில் 80% பேருக்கு முதல் தவணை கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இதேபோல 12 முதல் 14 வயது வரையிலான சிறாரில் 70% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இவை கரோனா தடுப்பூசி திட்டத்துக்கு மேலும் பெருமை சேர்த்துள்ளன. இவ்வாறு அவர் கூறியுள்ளார். இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி 16-ம் தேதி தடுப்பூசி போடும் பணி தொடங்கப்பட்டது. இதுவரை 192.52 கோடி டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x