

தமிழகத்தில் இன்று ஆண்கள் 16, பெண்கள் 11 என மொத்தம் 27 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். அதிகபட்சமாக சென்னையில் 15 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை 34 லட்சத்து 53,290 ஆக அதிகரித்துள்ளது.
இதுவரை 34 லட்சத்து 15,033 பேர் குணமடைந்துள்ளனர். இன்று மட்டும் 26 பேர் குணமடைந்து வீடுகளுக்குச் சென்றனர். தமிழகம் முழுவதும் 232 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று உயிரிழப்பு இல்லை. தமிழகத்தில் நேற்று கரோனா தொற்று பாதிப்பு 30 ஆகவும், சென்னையில் 19 ஆகவும் இருந்தது குறிப்பிடத்தக்கது.