Published : 14 Mar 2022 02:42 PM
Last Updated : 14 Mar 2022 02:42 PM
புதுடெல்லி: 12 முதல் 14 வயதுடையோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி வரும் புதன்கிழமை, அதாவது மார்ச் 16-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வயதுடைய அனைவருக்கும் கார்பேவாக்ஸ் (Corbevax) என்ற தடுப்பூசி செலுத்தப்படவுள்ளது. இந்த மருந்தை ஹைதராபாத்தைச் சேர்ந்த பயாலஜிக்கல் இவான்ஸ் (Biological Evans) என்ற மருந்து நிறுவனம் தயாரித்துள்ளது.
அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இணை நோய் இருந்தால் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்திக்கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில், அந்த நிபந்தனையும் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இனி 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்திக் கொள்ளலாம்.
தடுப்பூசி கடந்து வந்த பாதை: கடந்த 2021 ஆம் ஆண்டு ஜனவரி 16 ஆம் தேதி நாட்டில் முதன்முதலாக கரோனா தடுப்பூசி செலுத்தப்பட தொடங்கியது. அப்போது, 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மருத்துவர்கள், சுகாதாரப் பணியாளர்களுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. கோவாக்சின் , கோவிஷீல்ட் ஆகிய இரு தடுப்பூசிகள் மட்டும் புழக்கத்தில் கொண்டு வரப்பட்டன.
2021, அக்டோபர் 21 ஆம் தேதி 100 கோடி டோஸ் தடுப்பூசி சாதனை எட்டப்பட்டது. 2022, ஜனவரி 7 ஆம் தேதி 150 கோடி டோஸ் செலுத்தப்பட்டது. ஜூன் 3 ஆம் தேதி தொடங்கி, 15 முதல் 18 வயதுள்ளவர்கள் பிரிவினருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்த வயதுப் பிரிவில் மொத்த 7.4 கோடி பேர் உள்ளனர். இவர்களுக்கு கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது.
இன்றைய நிலவரப்படி நாடு முழுவதும் மொத்தம் 180.19 கோடி டோஸ்கள் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரும் மார்ச் 16 தொடங்கி 12 முதல் 14 வயதுடையோருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு இணை நோய் இருந்தால் முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்திக் கொள்ள முன்னுரிமை அளிக்கப்படும் எனக் கூறப்பட்டிருந்த நிலையில் அந்த நிபந்த்னையும் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்கிறது. இனி 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருமே முன்னெச்சரிக்கை டோஸ் செலுத்திக் கொள்ளலாம்.
வயதை எப்படி கணக்கிடுவது? - 12 வயது முதல் 14 வயது வரை என்றால் 12 முடிந்திருக்க வேண்டுமா, 12 ஆரம்பத்திலேயேவா என்றெல்லாம் பொதுமக்களுக்கு சந்தேகம் எழும் அல்லவா? அதனால், மத்திய அரசு இது தொடர்பான விளக்கத்தை அளித்துள்ளது. அதாவது 12 தொடங்கி 13 வயது வரை 13 தொடங்கி 14 வயது வரை உள்ள அனைவரும் தடுப்பூசிக்குத் தகுதியானவர்கள். 2008, 2009, 2010 ஆம் ஆண்டுகளில் பிறந்த குழந்தைகள் அனைவரும் இந்த கரோனா தடுப்பூசியை செலுத்திக் கொள்ளும் தகுதியைப் பெறுகிறார்கள் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT