Published : 08 Oct 2020 01:42 PM
Last Updated : 08 Oct 2020 01:42 PM

நாங்கள்தான் முதலில் கண்டுபிடித்தோம் என்ற முழக்கம், சந்திரனுக்கு மனிதனை முதலில் அனுப்புவது போன்றதா? கரோனா வாக்ஸின் அவசரகதி குறித்து அமெரிக்க மருத்துவ நிபுணர் விமர்சனம்

உலகில் அனைவரும் கரோனாவை தடுக்கும் வாக்ஸின் மருந்தை எடுத்துக்கொள்ள 3 ஆண்டுகள் ஆகும் என்று அமெரிக்க மேரிலேண்ட் பல்கலைக் கழக தொற்று நோய் நிபுணர் டாக்டர் ஃபாஹிம் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஃபாஹிம் யூனுஸ் ஆங்கில ஊடகம் ஒன்றிறு அளித்த பேட்டியில் இது தொடர்பாகக் கூறியிருப்பதாவது:

வாக்ஸினுக்கு இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது அடுத்த ஆண்டின் தொடக்கக் காலக்கட்டத்திலோ அனுமதி கிடைத்து விடும் என்று நம்பப்படுகிறது. அதன் பிறகே நம் அதிகபட்ச நோய் பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் பயன்படுத்த சந்தைக்கு வரும். வாக்ஸின் உங்களையும் என்னையும் வந்தடைய மேலும் ஓராண்டு ஆகலாம். அதாவது 8 மாதங்களாகவும் இருக்கலாம், 18 மாதங்களாகவும் இருக்கலாம்.

எனவே உலகம் முழுதும் கரோனா வைரஸ் தடுப்பு மருந்து பயன்படுத்தப்பட்டு பாதுகாப்பு எய்த குறைந்தது 3 ஆண்டுகள் ஆகும்.

இங்கு நாங்கள்தான் முதலில் வாக்சின் கொண்டு வந்தோம் என்பதில் என்ன விஷயம் இருக்கிறது, சந்திரனுக்கு மனிதனை முதலில் அனுப்புவது போன்றதா இது? இங்கு மருந்து துல்லியமாக இருக்க வேண்டும், பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதே முக்கியம்.

பாதுகாப்பான வாக்ஸின், திறம்பட வேலை செய்யும் வாக்ஸின் தான் இறுதியில் வெற்றியடையும்.

இயற்கையான நோய்த்தொற்றை விட கோவிட் ஆண்ட்டி பாடிகள் நம் உடலில் நீண்ட காலம் இருக்கும். ஆனால் நோய்த்தொற்று எத்தனை காலம் நீடிக்கும் என்பது நமக்குத் தெரியாதது.

நம்மிடையே டி-செல், பி-செல் நோய்த்தடுப்பாற்றல் உள்ளது, மனித உடல் புத்திசாலித்தனமானது, அதை அவ்வளவு எளிதில் முட்டாளாக்க முடியாது. எனவே வாக்ஸினால் உருவாகும் நோய் தடுப்பு/எதிர்ப்பாற்றல் 1-2 ஆண்டுகளுக்கு உடலில் நீடிக்கும்.

இந்தக் கரோனா வைரஸைக் கொல்ல இந்தக் காலக்கட்டம் போதுமானது.

அதுமட்டுமல்ல கரோனா சிகிச்சைகளிலும் பெரிய முன்னேற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. மார்ச் 8ம் தேதி என் முதல் கரோனா நோயாளிக்கு சிகிச்சை அளித்த போது நாங்கள் தவறான சிகிச்சை அளித்தோம். அவருக்கு எப்படி சிகிச்சை அளிப்பது என்பது எங்களுக்குத் தெரியவில்லை. எனவே அனைவருக்கும் வெண்ட்டிலேட்டர் தேவை என்றே நினைத்தோம்.

அதன் பிறகு வைரஸ் ரத்தக்கட்டை உருவாக்கும், அழற்சியை உருவாக்குகிறது என்பது தெரிந்த பிறகு சிகிச்சையை மாற்றினோம் பலனளித்தது. டெக்சாமெதாசோன் பயன்பாடு நோயாளிகளை பிழைக்க வைக்க அதிக வாய்ப்புகளை வழங்கியது தெரியவந்தது. இது மலிவானதும் கூட எளிதில் கிடைக்கக் கூடியதும் ஆகும்.

சிகிச்சைகளில் முன்னேற்றம் ஏற்பட்டதால் ஐசியு மரணங்கள் 30-40% குறைந்துள்ளது.

சாலையில் பனிமூட்டம் இருந்தால் என்ன செய்வோம், நாம் வாகனத்தை மெதுவாக ஓட்டுவோம் அல்லவா? இதில் செருக்குடன் செயல்பட முடியாது. வேகமாக இதில் சென்று நாம் வென்று விட்டோம் என்று நினைக்கும் போது இரண்டாம் அலை அடித்தால் என்ன செய்ய முடியும்?

தெற்காசியா, தென்கிழக்கு ஆசியாவில் கரோனா மரணங்கள் மற்ற பகுதிகளை ஒப்பிடும்போது குறைவாக இருப்பதற்கு மரபணு காரணமாக இருக்கலாம். மரபணுக்கூறு வைரஸுக்கு எதிராக தேவையான சக்தியை வழங்கியிருக்கலாம். முந்தைய வைரஸ் பரவல் இம்மக்களின் தடுப்பாற்றலை வளர்த்தெடுக்கலாம்.

ஆனால் தன்னம்பிக்கைக்கு எதிரான ஒன்று உள்ளது, நாம் போதிய அளவில் டெஸ்ட் செய்யவில்லை. கோடிக்கணக்கானோரை டெஸ் செய்தால்தான் தெரியும் இல்லையேல் தெரியாது, என்று அந்த ஊடகத்தில் கூறினார் டாக்டர் ஃபாஹிம் யூனுஸ்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x