Last Updated : 28 Jul, 2020 12:18 PM

 

Published : 28 Jul 2020 12:18 PM
Last Updated : 28 Jul 2020 12:18 PM

கரோனா பாதிக்கப்பட்டவர்களில்  ‘திசைத்திருப்பும் நோய் எதிர்ப்பாற்றல் அறிகுறிகள்’- ஆய்வில் தெரியவந்த பிரச்சினை- புதிதாகத் தோன்றிய கரோனா புதிர்

நாவல் கரோனா வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் போது நோய் எதிர்ப்பாற்றல் மேம்படுவதான திசைத்திருப்பும் அறிகுறிகள் தெரிவதாகவும் இதனால்தான் மரணங்கள் அதிகரிக்கின்றன என்றும் யேல் பல்கலைக் கழக ஆய்வு ஒன்று புதிய பிரச்சினையை எதிர்கொண்டுள்ளது.

யேல் நியூஹேவன் மருத்துவனையில் அனுமதிக்கப்பட்ட 113 கரோனா நோயாளிகளை ஆய்வு செய்த போது மாறுபட்ட நோய் எதிர்ப்பாற்றல் தெரிய வந்துள்ளது.

இந்த ஆய்வின் விவரங்கள் நேச்சர் ஆய்விதழில் வெளியாகியுள்ளது. இவர்கள் அனைவருக்குமே பொதுவான கரோனா வைரஸ் மாதிரிதான் பாதித்திருந்தது.

ஆனால் மிதமான நோய் அறிகுறிகள் இருப்பவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றல் எதிர்வினை குறைந்திருந்தது ஆனால் அதே வேளையில் வைரஸ் துகள்கள் அளவும் குறைந்ததைப் பார்க்க முடிந்தது, இது எப்படி சாத்தியம்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக இந்த ஆய்வின் முதன்மை நிபுணர் அகிகோ இவாஸாகி கூறும்போது, “சார்ஸ் கோவிட்-19 வைரஸ் சிகிச்சையில் நோய் எதிர்பாற்றல் எதிர்வினையை இந்த ஆய்வு வெளிப்படுத்தியது. அதாவது நோய் தீவிரமாக பாதிக்கப்பட்டவர்களின் நோய் எதிர்பாற்றல் எதிர்வினை திசைத்திருப்பும் விதமாக இருந்ததைப் பார்க்க முடிந்தது. இதனால்தான் மரணம் நிகழ்ந்ததாகவும் தெரியவந்தத்யு” என்றார்.

அதாவது இவர்களில் பெரும்பாலானோருக்கு நோய் எதிர்பாற்றல் குறிகள், சைட்டோகைன்கள் உட்பட அதிகமாகியுள்ளது, இதுதான் சிக்கல், சைட்டோகைன்கள் அதிகமாகியுள்ளது ஆனால் வைரஸ் சுமை மட்டும் குறையவில்லை. இது எப்படி? அதாவது எதிர்பாற்றல் பிரமாதமாக செயல்படுவது போல் காட்டுகிறது, ஆனால் வைரஸ் சுமை இவர்களிடத்தில் குறையவில்லை. இது புதிராக உள்ளது என்கிறார்கள் இந்த ஆய்வாளர்கள்.

கரோனா வைரஸுக்கு எதிரான ஆரம்பகட்ட சிகிச்சையின் போது எந்த மாதிரி கரோனா நோயாளிகளுக்கு தீவிரமாக நோய் பாதிப்பு வளர்கிறது என்பதை ஆய்வாளர்கள் கண்டுப்பிடித்தனர்.

முந்தைய ஆய்வுகளில் கரோனா நோய் தீவிரமாக பீடிக்கப்பட்ட நோயாளிகளின் உடல்களில் தீவிரமான நோய் எதிர்ப்பாற்றல் எதிர்வினை தோன்றி ரத்தத்தில் மேலதிகமான சைட்டோகைன்களை உருவாக்கும் தன்மையைக் கண்டனர். ஆனால் இதன் குறிப்பிட்ட வினைபற்றி கண்டுப்பிடிக்க முடியவில்லை.

தற்போதைய ஆய்வில் எதிர்ப்புச்சக்தி அமைப்பில் ஆல்பா இண்டர்ஃபெரான் என்ற வைரஸை எதிர்கொள்ளும் சைட்டோகைன் என்ற ரிஸ்க் காரணி ஒன்று இருப்பதைக் கண்டுப்பிடித்துள்ளனர்.

இது அதிகமிருந்தால் நோயாளி நல்ல நிலைக்குத் திரும்பி கொண்டிருக்கிறார் என்றல்லவா அர்த்தம்! ஆனால் அதிக அளவில் ஆல்ஃபா இண்டர்ஃபெரான் சைட்டோகைன் புரோட்டின் அதிகம் உள்ள நோயாளிகள் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளதாகவும் இந்த சைட்டோகைன் குறைவாக உள்ளவர்கள் அவ்வளவாக கரோனா தீவிரத்தன்மையை எட்டவில்லை என்கின்றனர். உண்மையில் இது ஒரு பெரிய முரந்தொடைதான். இம்யூன் சிஸ்டம் பிரமாதமாக வேலை செய்தால் கரோனாவிலிருந்து மீள வேண்டும், மாறாக இம்யூன்சிஸ்டம் நன்றாக இருப்பது போல் திசைத்திருப்பும் சிக்னல்கள் எப்படி உருவாகின்றன என்பதுதான் தற்போதைய புதிர்.

எனவே ஆய்வாளர்கள் என்ன முடிவுக்கு வருகிறார்கள் என்றால், “ஆல்ஃபா இண்டெர்பெரான் இருந்தாலும் அதை வைரஸ் பொருட்படுத்துவதில்லை என்று தெரிகிறது. சைட்டோகைன் இருப்பது நோயாளிக்கு தொந்தரவை அதிகப்படுத்துகிறதே தவிர உதவவில்லை” என்கிறார் ஆய்வாளர் இவாசாகி.

மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதற்கான இன்னொரு அறிகுறி என்னவெனில் நோய்க்கிருமிகளை கண்டுப்பிடிக்கும் கொத்தான புரொட்டீன்களை உருவாக்கி இது ‘இன்ஃப்ளமசோம்’ என்ற அழற்சி எதிர்வினைகளை முடுக்கி விடுகிறது.

இந்த ‘இன்ஃப்ளமசோம்’ தான் மரணத்துக்குக் காரணமாகி விடுகிறது. ஏனெனில் நாம் நோய் எதிர்ப்பாற்றல் நன்றாக வளர்ச்சியடைகிறது என்று நினைக்கும் திசைத்திருப்பும் வேலையை கரோனா சிகிச்சையின் ஏதோ ஒன்று செய்து விடுகிறது.

இந்த ஆய்வு முடிவுகளை ஒன்றிணைத்து பரிசீலித்த ஆய்வாளர்கள் அழற்சியை உருவாக்கும் காரணிகளை குறிவைத்து அழிக்கும் மருந்துகள் மூலம் கோவிட்-19 நோய் தீவிரமடைவதை தடுக்க உதவும் என்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x