Published : 08 Apr 2020 04:43 PM
Last Updated : 08 Apr 2020 04:43 PM

ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மீது முதலீடு செய்யும் ட்ரம்ப் கியூபாவில் உள்ள 22 வைரஸ் எதிர்ப்பு மருந்துகளை பொருட்படுத்தவில்லை: எழும் புதியக் குற்றச்சாட்டு 

அறிவியல் ரீதியாக நீக்கமற நிரூபிக்கப் படாத மலேரியாக் காய்ச்சலுக்கு எதிரான மருந்தான ஹைட்ராக்சிகுளோரோகுய்ன் மருந்திற்காக கடுமையாக ஆதரவளிக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், கியூபாவின் வைரஸ் கிருமிக்கு எதிரான 22 மருந்துகள் மீது பராமுகமாக இருப்பது ஏன் என்ற கேள்வியை அமெரிக்க அரசியல் வல்லுனர்களும் மருத்துவ நிபுணர்களும் எழுப்பி வருகின்றனர்.

அமெரிக்காவின் கார்ப்பரேட்டுகளுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் கரோனா வைரஸ் அல்லது கோவிட்-19 என்பது ஒரு வாய்ப்பு ஆகும். அதாவது எதற்கான வாய்ப்பு எனில் முறையற்ற விதங்களில் லாபமற்ற முறையில் நடத்தும் நிறுவனங்கள் அமெரிக்க அரசின் நிதியுதவி பெய்ல் அவுட்களை ஒட்டுமொத்தமாகத் தட்டிச்செல்ல கோவிட்-19-ஐ ஒரு வாய்ப்பாக கருதுவதாக நாவலாசிரியரும், பத்திரிகையாளருமான ஈவ் ஆட்டன்பர்க் என்பவர் கவுன்ட்டர் பஞ்ச் என்ற இணையதளத்தில் எழுதிய கட்டுரை ஒன்றில் விமர்சித்துள்ளார்.

மேலும் அவர் கூறும்போது கோவிட்-19 இன்னொரு வாய்ப்பாக அமெரிக்கா பார்ப்பதன் நோக்கம் என்னவெனில் ஈரானை முற்றிலும் காலி செய்வதற்கும் அமெரிக்காவை எதிர்க்கும் வெனிசூலாவை முற்றிலும் சீரழிப்பதற்குமான வாய்ப்பாகப் பார்த்து பொருளாதாரத் தடைகளை கொவிட்-19 என்ற கொள்ளை நோய் காலத்தில் செயல்படுத்துகிறது என்று சாடுகிறார்.

அதிபர் ட்ரம்புக்கும் அவரது ஆலோசகர்களுக்கும் இந்த கரோனா எனும் மரண வைரஸ் மனித நேயத்தையும், தர்ம சிந்தனையையும், கருணையையும் போதிக்கவில்லை மாறாக இதனை கோவிட்-19 காலத்தில் தான் இழந்து நிற்கும் உலக அதிகாரத்தை மீண்டும் விதைக்கும் ஒரு களமாகப் பார்ப்பதாக ஈவ் ஆட்டன்பர்க் அதே கட்டுரையில் கடுமையாக விமர்சித்துள்ளார்.

நாடுகள், தனிநபர்கள், நிறுவனங்கள் என்று அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை உருவாக்கி வருகிறது.

இப்போதைக்கு அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளிலிருந்து பாதுகாப்பான தொலைவில் இருப்பது கியூபா மட்டுமே. பொருளாதாரத் தடைகள் கியூபாவின் வைரஸ் ஆராய்ச்சியையும் பாதிக்கும் அளவுக்கு மேற்கொள்ளப்பட்டது, ஆனால் கியூபா தடைகளின் உச்சக் காலமான 1981-லேயே அங்கு டெங்கு பரவலை தனது மருந்தின் மூலம் கட்டுப்படுத்தியது. தற்போது கியூபா தனது வைரஸ் நிபுணர்களையும் மருத்துவர்களையும் தனது வைரஸ் எதிர்ப்பு மருந்துகளையும் உலகம் முழுதும் அனுப்பியுள்ளது.

கியூபாவிடம் 22 வைரஸ் எதிர்ப்பு மருந்துகள் உள்ளன. இவை கோவிட்-19க்கு எதிராக நிச்சயம் நல்ல பலன்களை அளிப்பதாகக் கூட இருக்கலாம். இதில் குறிப்பாக இண்டெர்ஃபெரான் ஆல்ஃபா 2 பி என்ற மருந்து சீனா கரோனாவுக்கு எதிராக பயன்படுத்திய 30 மருந்துகளில் பெரும் பங்களிப்பு செய்துள்ளதை சீனாவே ஒப்புக் கொண்டுள்ளது. இந்த இண்டெர்பெரான் ஆல்பா 2பி கோவிட்டுக்கு எதிராக உண்மையில் நல்ல பலன்களை அளித்துள்ளதையடுத்து 45 நாடுகள் கியூபாவிடம் இந்த மருந்தை அனுப்ப கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் அமெரிக்கா இதுவரை இண்டெர்பெரான் ஆல்பா 2பி குறித்து வாயையே திறக்கவில்லை. மக்களின் உயிர்காப்பு மருந்து பற்றி அமெரிக்கா இன்னமும் வாயைத்திறக்காமல் இருப்பது அங்குள்ள மருத்துவ ஆய்வு வட்டாரங்களில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாக சிஎன்என் கட்டுரை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இப்போது சீனா, கியூபாவிடமிருந்து இத்தாலி மருத்துவ உதவி கோரியுள்ளது. பல நாடுகளும் இதனைப் பின் தொடர்கின்றன, அமெரிக்க தடைகளைப் பற்றி இவர்கள் கவலைப்படவில்லை என்று அமெரிக்கப் பத்திரிகைகள் அதிபர் ட்ரம்ப் அங்குள்ள கார்ப்பரேட் சூழல் எப்படி கோவிட்-19-ஐ தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றனர் என்ற ரீதியில் கட்டுரைகளை எழுதி கடும் விமர்சனங்களை தொடுத்து வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x