Published : 01 Apr 2020 12:52 PM
Last Updated : 01 Apr 2020 12:52 PM

கரோனா வைரஸ்: இந்தியாவில் வைரஸின் 3 துணை வகைமாதிரிகள் சுழற்சியில் உள்ளன: ஐசிஎம்ஆர்

சார்ஸ்-சிஓவி-2 (SARS-CoV-2)வகையின் 3 துணை வகைமாதிரி வைரஸ்களின் கலவை இந்தியாவில் சுழற்சியில் இருப்பதாக இந்திய மருத்துவ ஆய்வுக் கழகம் (ஐசிஎம்ஆர்) தெரிவித்துள்ளது.

இறக்குமதியான இந்த கரோனா வைரஸின் ஒரு மாற்று வகைமாதிரிகள் அது எங்கு தொடங்கியதோ அங்கு அது செயல்படும் விதங்களிலிருந்து இங்கும் மாறுபடவில்லை. SARS-CoV-2-இன் இந்த மாறிய வகைமாதிரியை ‘இந்திய ஸ்ட்ரெய்ன்’ என்று இன்னமும் விஞ்ஞானிகள் வகைப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஐசிஎம்ஆர்-ன் தொற்று நோய் பிரிவின் தலைவர் ஆர்.கங்காகேட்கர், “இந்தியாவின் கோவிட்-19 அல்லது கொரோனா வைரஸ் தொற்று என்பது வெளிநாட்டிலிருந்து இந்தியா வந்தவர்கள் மற்றும் இவர்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டவர்கள் மூலமே பரவுகிறது, அதாவது இது வெளிநாட்டிலிருந்து இறக்குமதியானதே. உலகம் முழுதும் இந்த வைரஸின் செயல்பாடு இருக்கும் விதத்துக்கும் இந்தியாவில் இதன் செயல்பாட்டுக்கும் அதிக வித்தியாசம் தெரியவில்லை. எனவே அதன் தீவிரத்தில் மாறுபாடு இல்லை. இந்தியா போன்ற பெரிய நாட்டில் கோவிட்-19 என்பதன் முன்னேற்றம் பரவல் குறித்து துல்லியமான போக்கைக் கணிப்பது கடினம். ஏனெனில் நமக்கு போதிய கால இடைவெளி இல்லை. எனவே இந்தியாவில் கேஸ்களின் எண்ணிக்கை வேகத்தை பிற நாடுகளில் பரவும் எண்ணிக்கை விகிதங்களுடன் ஒப்பிட முடியாது. இப்போதைக்கு மக்கள் இதன் ரிஸ்க்குகளை பார்த்து சமூக விலகலை கடைபிடித்து வருகிறார்கள்” என்றார்.

பரிசோதனை உபகரணங்கள் இன்னமும் கூட இங்கு ஒரு விவகாரம்தான் என்று கூறும் ஐசிஎம்ஆர், கண்டமேனிக்கு வகைதொகை இல்லாமல் முகக்கவசங்களைப் பயன்படுத்தக் கூடாது என்று கூறுகிறது.

அடுத்த 2 மாதங்களில் இந்தியாவிலேயே நோய்க்கணிப்பு சாதனங்கள் தயாரிக்கப்படும் என்று கூறும் டாக்டர் கங்காகேட்கர், “இதுவரை இந்தியாவில் 42,788 சாம்பிள்கள் சோதிக்கப்பட்டுள்ளன. இதில் 4,346 சோதனைகள் திங்களன்று நடத்தப்பட்டது. இது நம் பரிசோதனைத் திறனில் 36% ஆகும். கோவிட்-19க்காக 47 தனியார் சோதனை நிலையங்கள் அனுமதிக்கப்பட்டுள்ளன. இவர்கள் திங்களன்று 399 சோதனைகளை மேற்கொண்டனர்” என்றார்.

மாநிலங்களின் சுகாதாரத்துரை தகவல்களின் படி இந்தியாவில் கரோனா ரிப்போர்ட்டட் கேஸ்கள் 1544 இதில் 1376 பேருக்க் கரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

இந்திய சுகாதாரத் துறையின் இணைச் செயலர் லாவ் அகர்வால் கூறிய போது சமூக விலகலை ஒரு நபர் மீறினாலும் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றார். அதனால்தான் ஒரு வைரஸ் கேஸ் உறுதியானால் கூட அதன் சங்கிலித் தொடரை உடைக்க உடனடியாக மருத்துவ நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. சமூகவிலகலை தொடர்ந்து கடைபிடிக்காவிட்டால் இன்றைய வெற்றிக் கதை நாளைய வைரஸ் ஹாட்ஸ்பாட்டாகி விடும்” என்றார்.

இன்னொரு இணைச் செயலர் புண்ய சலீலா ஸ்ரீவஸ்தவா 6 லட்சத்துக்கும் அதிகமான குடியேறிகள் 61,000 நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

நாடு முழுதும் தற்போது 129 அரசு கரோனா வைரஸ் பரிசோதனைக் கூடங்கள் செயல்பட்டு வருகின்றன, இவை நாளொன்றுக்கு 13,000 சோதனைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும் போதுமான டெஸ்ட் சாதனங்கள் வாங்கப்பட்டு மாநிலங்கள் முழுதும் அளிக்கப்பட்டுள்ளன என்றார்.

மனித கரோனா வைரஸ் 1960-ம் ஆண்டு முதன் முதலாக அடையாளம் காணப்பட்டது. மனிதர்களை தொற்றும் கரோனா வைரஸ் 7 வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன. அவையாவன:

பொதுவான மனித கரோனா வைரஸ்கள்:

1. 229E (ஆல்பா கரோனா வைரஸ் coronavirus)
2. NL63 (ஆல்பா கரஓனா வைரஸ்)
3.OC43 (பீட்டா கரோனா வைரஸ்)
4. HKU1 (பீட்டா கரோனா வைரஸ்)

பிற மனித கரோனா வைரஸ்கள்:

5.மிடில் ஈஸ்ட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் மெர்ஸ்
6. சிவியர் அக்யூட் ரெஸ்பிரேட்டரி சிண்ட்ரோம் என்று அழைக்கப்படும் சார்ஸ்
7.சார்ஸ் சிஓவி-2 என்று அழைக்கப்படும் கோவிட்-19

என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x