

கரோனா வைரஸ் நோய் தொற்றைத் தடுக்கும் வகையில் 22-ம் தேதி(நாளை) காலை 6 மணி முதல் 31-ம் தேதிவரை நள்ளிரவு வரை டெல்லி முழுவதும் கூடுதல்கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது(லாக்டவுன்) என்று முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அறிவித்தார்
துணைநிலை ஆளுநர் அனில் பைஜாலுடன் இணைந்து இந்த தகவலை முதல்வர் கேஜ்ரிவால் தெரிவி்த்தார்.
உலகை உலுக்கி வரும் கரோனா இந்தியாவையும் விட்டு வைக்கவில்லை. கடந்த வாரத்தில் இருந்து மெல்ல,மெல்ல ஊடுருவி தன் கோர முகத்தை காட்டி வருகிறது.
இந்தியாவில் இதுவரை கரோனாவுக்கு 341 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், 7 பேர் உயிரிழந்துள்ளனர். ெடல்லியில் 27 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அடுத்துவரும் நாட்களில் மக்களின் சமூகத் தொடர்பைத் துண்டிக்கும் வகையில் பல அதிரடி நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக நாளை முதல் 31-ம் தேதிவரை டெல்லியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் போராட்டம், அரசியல், மதம், கலாச்சார ரீதியாக கூட்டம் நடத்துதல், மக்கள் 4 பேருக்கு மேல் கூடத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் கரோனா பரவுவதை தீவிரமாகத் தடுக்கும் வகையிலும், மக்களின் சமூகத் தொடர்பைத் துண்டிக்கும் வகையில் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால், துணை நிலை ஆளுநர் அனில் பைஜால் இருவரும் சேர்ந்து டெல்லியில் அடுத்த 8 நாட்களுக்கு லாக்டவுன் கொண்டுவரும் முடிவை அறிவித்தனர்.
அது குறித்து டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அளித்த பேட்டியில் கூறியதாவது:
கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க டெல்லி அரசு பல்வேறு தொடர் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. டெல்லியில் 27பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, நாளை காலை 6 மணி முதல் 31-ம் தேதி நள்ளிரவு 12 மணிவரை டெல்லி முழுவதும் லாக் டவுன் அறிவிக்க உள்ளோம்.
யாருக்கெல்லம் விதிவிலக்கு
இவ்வாறு கேஜ்ரிவால் தெரிவித்தார்