Published : 21 Mar 2020 04:29 PM
Last Updated : 21 Mar 2020 04:29 PM

வீட்டிலேயே கிருமி நாசினி செய்வது எப்படி?- நீலகிரி மாவட்ட நிர்வாகத்தின் செயல் விளக்கம்

வீட்டிலேயே கிருமி நாசினி செய்ய யோசனை.

நீலகிரி

கரோனா வைரஸ் பரவலை அடுத்து மக்கள், கிருமி நாசினிகளை நாடி வருகின்றனர். இதனால், அவற்றுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கிருமி நாசிகளின் விலை உயர்வைத் தடுக்கவும், தட்டுப்பாட்டைப் போக்கும் வகையிலும் வீடுகளிலேயே கிருமி நாசினி தயாரிக்கும் முறை குறித்து நீலகிரி மாவட்ட நிர்வாகம் செயல் விளக்கம் அளித்து வருகிறது.

ஒட்டுமொத்த உலக மக்களையும் அச்சுறுத்தி வரும் கரோனா வைரஸ் பரவலால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சர்வதேச மருத்துவப் பேரிடராக கருதப்பட்டாலும், ரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும், நாளுக்கு நாள் தொற்று பரவல் அச்சமூட்டும் வகையில் அதிகரித்துக்கொண்டே போகிறது.

கரோனா வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் கோவிட் -19 காய்ச்சலுக்கு இதுவரை முறையாக மருந்து கண்டறியப்படாத நிலையில் கரோனா தொற்றிலிருந்து தற்காத்துக்கொள்ளும் நடவடிக்கைகளே அதிகம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சுகாதாரத்தைப் பேணும் அத்தியாவசியப் பொருட்களான முகக் கவசம், கிருமி நாசினிகள் போன்றவற்றின் தேவை அதிகரித்து, பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதைச் சாதகமாக்கிக்கொண்ட பலர் இதை லாபச் சந்தையாக்கி பல மடங்கு விலையை உயர்த்தி, கொள்ளை லாபம் ஈட்டுவதாகத் தொடர் புகார்கள் எழுந்தவண்ணம் உள்ளன.

கிருமி நாசினியின் தட்டுப்பாட்டை ஈடுகட்டும் வகையில் வீட்டிலேயே மிகச்சிறந்த கிருமி நாசினியைத் தயாரிக்க நீலகிரி மாவட்ட நிர்வாகம் யோசனை வழங்கி வருகிறது.

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா தலைமையில் சுகாதாரத்துறை மற்றும் நகராட்சி ஊழியர்கள் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்குக் கை கழுவும் முறை மற்றும் கிருமி நாசினி தயாரிப்பது குறித்து எடுத்துரைத்து வருகின்றனர். மேலும், பிளீச்சிங் பவுடர் மூலம் கிருமி நாசினி தயாரிக்கும் முறை குறித்து மக்களுக்கு செயல் விளக்கம் அளித்து வருகின்றனர்.

மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா இதுகுறித்துக் கூறும்போது, "320 கிராம் பிளீச்சிங் பவுடரை 1 லிட்டர் தண்ணீரில் கலந்து, நன்கு கலக்க வேண்டும். அந்த கரைச்சலை அப்படியே விட்டு விட்டு, சிறிது நேரம் கழித்து அடியில் தங்கும் கசடை விடுத்து, தெளிந்த நீரை 9 லிட்டர் தண்ணீருடன் கலந்து கிருமி நாசினியாகப் பயன்படுத்தலாம்.

இந்த முறையைப் பின்பற்றினால் வீட்டிலேயே மிக எளிமையாகக் கிருமி நாசினியைத் தயார் செய்ய முடியும். இதன் மூலம் நமக்கு 9 லிட்டர் கிருமி நாசினியும் கிடைக்கும். இதைக்கொண்டு வீடுகளிலும் பொது இடங்களிலும் தினமும் தெளித்து தற்காத்துக்கொள்ள முடியும்" என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x