Published : 21 Mar 2020 01:42 PM
Last Updated : 21 Mar 2020 01:42 PM

வேலை இல்லாத ஊழியர்களுக்கு 80 சதவீத ஊதியம்: யுகே அதிரடி அறிவிப்பு

கரோனா வைரஸ் காரணமாக வேலை இல்லாத ஊழியர்களுக்கு 80 சதவீத ஊதியம் வழங்கப்படும் என்று யுகே அறிவித்துள்ளது.

உலக அளவில் கரோனா வைரஸ் மிகப்பெரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது. உலக அளவில் இதுவரை 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். வைரஸ் பரவலைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.

இந்நிலையில் யுகேவில் முதல் முறையாக வேலை இல்லாத ஊழியர்களுக்கு ஊதியம் வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக யுகே கருவூலத் தலைவரும் இந்திய வம்சாவளி நிதியமைச்சருமான ரிஷி சுனக் கூறும்போது, ''நம்முடைய வரலாற்றில் முதல் முறையாக இந்த அறிவிப்பை வெளியிடுகிறேன். அரசே மக்களின் ஊதியத்தை வழங்க முடிவெடுத்திருக்கிறது.

மக்கள் வேலைகளை இழந்துவிடுவோம் என்று அச்சப்படுவது எனக்குப் புரிகிறது. வாடகை கொடுக்க முடியாது, உணவுக்கு வழியிருக்காது என்று பயப்படுகின்றனர். இவை ஏற்பட விடமாட்டோம்.

பிரிட்டிஷ் மக்களுடன் நாங்கள் கை கோக்கிறோம். இதற்காகத் தனித் திட்டத்தையே அறிவித்துள்ளோம். கரோனா வைரஸ் காரணமாக தற்போது வேலை இல்லாத ஊழியர்களுக்கு மாதம் சுமார் ரூ.2.2 லட்சம் வரை (2,500 பவுண்டுகள்) அரசே வழங்கும்.

கரோனா வைரஸ் வேலைவாய்ப்புத் திட்டத்தின் மூலம் சம்பளம் வழங்கப்படும். இதற்கான நிறுவனங்களுக்கு 12 மாதங்களுக்கு வட்டி இல்லாத கடன் வழங்கப்படும். லோன் வசதியும் இதில் உண்டு'' என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x