

கரோனா வைரஸின் கடும் தாக்கம் காரணமாக உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவில் மட்டும் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்தை தாண்டியுள்ளது.
சீனாவில் உருவான கரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியதை அடுத்து இந்நோய்ககு சுமார் 2 லட்சத்துக்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் இதுவரை 10,000 பேர் வரை பலியாகியுள்ளனர்.
சீனாவில் தோன்றினாலும் இந்த உயிர்க்கொல்லிக் கிருமி ஐரோப்பாவை கடுமையாக தாக்கியுள்ளது. சீனாவைவிட இத்தாலியில்தான் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தியுள்ளது. ஐரோப்பாவில் இதுவரை 100,470 பேருக்கு நோய்த்தொற்றுகள் ஏற்பட்டுள்ளன. இந் நோய்த் தொற்றில் 4,752 பேர் பலியாகியுள்ளனர்.
ஆசியாவில் 94,253 பேரை பாதித்து, 3,417 பேரை பலிகொண்ட எண்ணிக்கையைவிட ஐரோப்பாவில் மிக அதிக அளவில் இந்நோய் தாக்கியுள்ளது..
பரிசோதனைகளின் மூலம் கண்டறியப்பட்ட பாதிப்புகளின் எண்ணிக்கை உண்மையான நோய்த்தொற்றுகளின் ஒரு பகுதியை மட்டுமே பிரதிபலிக்கிறது, ஏனெனில் பல நாடுகள் மிகக் கடுமையான பலவீனமான நோய் அறிகுறிகளைக் கொண்டவர்களை மட்டுமே தீவிரமாக தாக்கியுள்ளது.
பிரான்ஸில் ஏற்பட்டு வரும் பாதிப்புகள் குறித்து அந்நாட்டு உயர் சுகாதார அதிகாரி ஜெரோம் சாலமன் கூறியதாவது:
''கரோனா வைரஸ் நோய்த் தொற்றுக்கு கடந்த 24 மணி நேரத்தில் பிரான்சில் மட்டும் 108 பேர் பலியாகியுள்ளனர். இதன் மூலம் பிரான்சில் பலி எண்ணிக்கை 372ஆக கூடியுள்ளது. ஒவ்வொரு நான்கு நாட்களுக்கும் தொற்றுநோய்களின் எண்ணிக்கை இரட்டிப்பாகி வருகிறது. பிரான்சில் இந்த வைரஸ் "விரைவாகவும் தீவிரமாகவும்" பரவி வருகிறது.
இவ்வாறு உயர் சுகாதார அதிகாரி ஜெரோம் சாலமன் தெரிவித்தார்.