

கரோனா வைரஸ் என்கிற கோவிட்-19 காய்ச்சல் கொள்ளை நோயிலிருந்து கொஞ்சன் கொஞ்சமாக விடுபட்டு வரும் சீனா தற்போது கரோனா பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு மருத்துவ உதவிகளை வழங்கி வருகிறது.
முதலி இத்தாலிக்கு சீன மருத்துவ நிபுணர்களுஅன் 30 டன்கள் கொண்ட மருந்துகள் உள்ளிட்ட காப்புச் சாதனங்களை அளித்து உதவியது.
இதனையடுத்து கரோனா பாதித்த பிரான்சுக்கு சீனா 10 லட்சம் முகக்கவசங்களை விமானத்தில் அனுப்பியது, இது பெல்ஜியம் வழியாக பிரான்ஸுக்குச் செல்கிறது.
இரண்டு சீன அறக்கட்டளைகள் இதனை சேகரித்து பிரான்சுக்கு அனுப்பியுள்ளது. கிழக்கு சீனாவின் ஹாங்சூ மாகாணத்திலிருந்து நன்கொடை பேக்கேஜுடன் புறப்பட்ட சரக்கு விமானம் நேற்று மாலை 5.30 மணியளவில் பெல்ஜியம் லீஜ் விமான நிலையத்தை வந்தடைந்தது.
இந்த உதவிகள், நன்கொடைகள் சீன சமூக விவகார அமைச்சக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படும் என்று ஆன்லைன் வர்த்தக நிறுவனமான அலிபாபா அறக்கட்டளை மற்றும் ஜேக் மா அறக்கட்டளையும் அறிவிப்பு ஒன்றில் தெரிவித்துள்ளாது.
இதே விமானத்தில் மற்ற ஐரோப்பிய நாடுகளுக்கான மருத்துவ உதவிப்பொருட்களும் இருந்தன. நடப்பு ஆரோக்கிய நெருக்கடியிலிருந்து மீள தற்போது சீனா ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு உதவத் தொடங்கியுள்ளதாக சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.