

உலகில் வேறெங்கும் இல்லாத அளவுக்கு ஐரோப்பாவில் கரோனா வைரஸ் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் இதுவரை 100 பேர் பலியாகியுள்ளனர்.
சீனாவில் உருவாகி உலகின் 150க்கும் மேற்பட்ட நாடுகளில் கோவிட்-19 வைரஸ் நோய்த் தொற்று கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தற்போது வரை 2 லட்சத்து 19 ஆயிரம் பேர் இந்நோயினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை உலக அளவில் 8,790 பேர் பலியாகியுள்ளனர். 85,749 பேர் இதுவரை கரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளனர்.
ஒட்டுமொத்த ஐரோப்பாவுக்கு வரும் நெருக்கடியிலிருந்து இங்கிலாந்தும் தப்பவில்லை என்பதுதான் உண்மை. அங்கு கரோனா வைரஸ் தாக்கத்தினால் இதுவரை 100க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இதுகுறித்து ஹூவாய் சீன பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தின் இணையதளம், 19 மார்ச் மதியம் 1 மணி வரையில் அறிவித்துள்ள புள்ளிவிவரத்தில் கூறியுள்ளதாவது:
ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக இத்தாலியில் கரோனா வைரஸால் 35,714 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 2,978 பேர் பலியாகியுள்ளனர்.
* ஸ்பெயினில் 14,769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 638 பேர் பலியாகியுள்ளனர்.
* ஜெர்மனியில் 12,327 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 28 பேர் பலியாகியுள்ளனர்.
* நெதர்லாந்தில் 2,051 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 58 பேர் பலியாகியுள்ளனர்.
* ஸ்விட்சர்லாந்தில் 3,115 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 33 பேர் பலியாகியுள்ளனர்.
* இங்கிலாந்தில் 2,624 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 104 பேர் இதுவரை பலியாகியுள்ளனர்.
இவ்வாறு ஹூவாய் சீன பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனத்தின் இணையதளம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்தில் அடிப்படையான சுகாதாரச் சேவைகள் சரியாக இருப்பதாகவும் பெரும்பாலும் இங்கு கரோனா வைரஸுக்குப் பலியானர்வர்கள் 59 முதல் 94 வயதிற்குட்பட்டவர்கள் என்றும் இங்கிலாந்து அரசின் தேசிய சுகாதார சேவை தெரிவித்துள்ளது.