தூத்துக்குடியில் கரோனா அறிகுறியுடன் சிஐஎஸ்எஃப் வீரர் அனுமதி

தூத்துக்குடியில் கரோனா அறிகுறியுடன் சிஐஎஸ்எஃப் வீரர் அனுமதி
Updated on
1 min read

தூத்துக்குடியில் கரோனா அறிகுறியுடன் சிஐஎஸ்எஃப் வீரர் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உலக சுகாதார அமைப்பு கரோனாவைக் கொள்ளைநோய் என்று அறிவித்திருக்கிறது. கரோனாவால் இதுவரை உலகம் முழுவதும் 7,988 பேர் உயிரிழந்துள்ளனர்.1,98,513 பேருக்கு கரோனா ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஒட்டுமொத்த உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கோவிட்-19 வைரஸ் பரவுவதை தடுப்பதற்காக மத்திய-மாநிலஅரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

தமிழகத்தில் மார்ச் 31 வரை கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தூத்துக்குடியில் அரசு மருத்துவமனியில் கரோனா அறிகுறியுடன் சிஐஎஸ்எஃப் வீரர் ஒருவர் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அசாமில் பணிபுரிந்துவந்த அவர், தொடர் காய்ச்சல் காரணமாக சொந்த ஊர் திரும்பினார். அவர் தற்போது அரசு மருத்துவமனையில் தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய ரத்த மாதிரிகள் ரத்த மாதிரி பரிசோதனைக்காக இன்று சேகரிக்கப்படுவதாகவும் தகவல்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in