கரோனா வைரஸ்: கோவிட்-19 குறித்த  சமீபத்திய அப்டேட்ஸ்

கரோனா வைரஸ்: கோவிட்-19 குறித்த  சமீபத்திய அப்டேட்ஸ்
Updated on
2 min read

கரோனா வைரஸ் நோய்த்தொற்று குறித்த இந்திய மற்றும் உலகின் சமீபத்திய நிலவரங்கள் என்னவென்பது இங்கு தொகுத்தளிக்கப்படுகிறது.

கல்ஃப் ஏர்லைன் ஃபிளை துபாய் இந்தியாவுக்கான விமானங்களை ஒரு மாத காலத்திற்குத் தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. மேலும் கரோனா வைரஸ் அச்சுறுத்தால் விசாக்களும் கட்டுப்படுத்தப்பட்டு வருகின்றன.

மகாராஷ்டிராவில் இன்று 3வது கரோனா மரணம் ஏற்பட்டதையடுத்து பரவலான கட்டுப்பாட்டு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுபவர்களைச் சோதனை செய்யும் ப்ரீத் அனலைசர் சோதனைக்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

உலகம் முழுதும் கரோனா தொற்று கடும் அச்சுறுத்தல்களை ஏற்படுத்தி வரும் நிலையில் உலகின் அனைத்து முக்கிய விளையாட்டு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஆனால் கிரிக்கெட் ஆஸ்திரேலியா அக்டோபரில் ஐசிசி டி20 உலகக்கோப்பையை நடத்துவோம் என்று தெரிவித்துள்ளது.

மத்திய தகவல் ஆணையம் அவசர விசாரணைகளை வீடியோ, ஆடியோ தொலைமாநாடு மூலம் மார்ச் 31ம் தேதி வரை நடத்துவதாக அறிவித்துள்ளது.

மகாராஷ்ட்ரா தலைமைச் செயலகத்தில் கோவிட்-19 பாதிக்கப்பட்டவர் இருப்பதாக வதந்தி கிளம்பியது.

கேரளாவில் கரோனாவுக்கு பாதிக்கப்பட்ட மருத்துவருடன் தனக்கு தொடர்பு ஏற்பட்டிருபப்தால் மத்திய அமைச்சர் வி.முரளீதரன் தன்னைத்தானே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

காலாபுர்கி, கர்நாடகாவில் கரோனாவுக்கு பலியான 76 வயது முதியவருக்கு ஆரம்ப கால சிகிச்சை அளித்த 63 வயது டாக்டர் ஒருவருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து அவர் இஎஸ்ஐசி மருத்துவமனையில் தனிமைப்பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

விளையாட்டு தொடர்பான அனைத்து தேசிய முகாமகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக அறிவித்த மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு, ஒலிம்பிக் போட்டிகளுக்குத் தயார் படுத்திக் கொள்ளும் வீரர்களுக்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

ஹரியாணாவில் 29 வயது பெண்மணி ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி பாஜக எம்.பி.க்களை அறிவுறுத்தியுள்ளார், ஆனால் நடப்பு நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் தொடரும் என்றார்.

உத்தரப் பிரதேச நொய்டாவில் 2 பேர்களுக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்தனர்.

வாகனங்களில் இயங்கும் வர்த்தகப் பிரிவு கரோனா பரவல் அச்சுறுத்தினால் விநியோக சங்கிலிகளை பெரிய அளவில் தொந்தரவு செய்யும் என்று மூடிஸ் நிறுவனம் தெரிவித்தது.

ஆப்கானிஸ்தான், பிலிப்பைன்ஸ், மலேசியா ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவுக்கு வர பயணத்தடைவ் விதிக்கப்பட்டது.

நியூயார்க்கில் உள்ள ஐநா ஊழியருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் கரோனா தொற்று உறுதியாகியிருப்பது 129 என்ற எண்ணிக்கையை தொட்டுள்ளது. இறந்தோர் எண்ணிக்கை 3ஆக அதிகரித்துள்ளது.

கரோனா வைரஸ் பரவலைத் தடுக்க அயல்நாட்டிலிருந்து திரும்புபவர்கள் தங்கள் வருகையை கட்டாயமாக பதிவு ச்செய்ய வேண்டும். இவர்களுக்கு ரூ.15,000 ஊக்கத்தொகையும் வீட்டிலேயே தனிமைப்பிரிவும் உருவாக்கப்படும் என்று ஒடிசா அரசு அறிவித்துள்ளது.

லடாக்கில் 3 பேருக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in