

பார்வையாளர்கள் சந்திப்பு, பொது நிகழ்ச்சிகள், கட்சி தொடர்பான கூட்டங்களை பாமக ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் கரோனா வைரஸைத் தடுக்க எடுக்கப்பட்டு வரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதல்வா் பழனிசாமி தலைமையில் நேற்று (மார்ச் 17) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து முதல்வர் பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பில், மாநிலத்தில் செயல்படும் அரசு, மாநகராட்சி மற்றும் தனியாா் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், பயிற்சி மையங்கள், அங்கன்வாடி மையங்கள், திரையரங்குகள்-திருமண மண்டபங்கள்: மாநிலத்தில் செயல்படும் அனைத்து திரையரங்குகள், மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள், கேளிக்கை அரங்குகள், நீச்சல் குளங்கள், உடற்பயிற்சி மையங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்கள் உள்ளிட்ட அனைத்தையும் வரும் 31 ம் தேதி வரை மூட உத்தரவிட்டார்.
இந்நிலையில், தைலாபுரம் தோட்டத்தில் தினமும் தன்னை பார்க்க வரும் பார்வையாளர்கள் சந்திப்பை பாமக நிறுவனர் ராமதாஸ் ரத்து செய்துள்ளார் என்ற தகவல் வெளியானது.
இதுகுறித்து பாமக நிர்வாகிகளிடம் கேட்டபோது, "நாள்தோறும் முற்பகல் 11 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை பார்வையாளர்கள், கட்சியினர் ராமதாஸை சந்திப்பது வழக்கம். இந்த சந்திப்பு நேற்று முதல் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வலியுறுத்திய பாமக நிறுவனா் ராமதாஸுக்கு, உழவா் பேரியக்கம் சாா்பில் 14-ம் தேதி மயிலாடுதுறையில் நடைபெற இருந்த பாராட்டு விழா ரத்து செய்யப்பட்டது. பொது நிகழ்ச்சிகள், கட்சி தொடர்பான கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பிலிருந்து இந்தியா மீண்ட பின்பு வழக்கம் போல மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பும்" என்றனர்.