Last Updated : 16 Mar, 2020 12:16 PM

 

Published : 16 Mar 2020 12:16 PM
Last Updated : 16 Mar 2020 12:16 PM

கரோனா உறுதியானது: தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்ட சுவிட்சர்லாந்து கால்பந்து கூட்டமைப்புத் தலைவர்

பரிசோதனையில் கரோனா வைரஸ் உறுதியானதைத் தொடர்ந்து கால்பந்து வீரரும் சுவிட்சர்லாந்தின் கால்பந்து கூட்டமைப்பின் தலைவருமான டொமினி பிளாங்க் வீட்டில் தன்னைத் தானே தனிமைப்படுத்திக்கொண்டார்.

சீனாவில் உருவாகி உலகை இன்று அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோன வைரஸ் உலகம் முழுவதும் 6000 பேரை பலிவாங்கியுள்ளது. கரோனா வைரஸ் ஐரோப்பாவை கடுமையாக தாக்கியுள்ளது. இங்கு ஸ்பெயின், இத்தாலி உள்ளிட்ட நாடுகளில் கடும் விளைவுகளை ஏற்படுத்தி 2000 உயிரிழக்க வைத்துள்ளது.

சுவிட்சர்லாந்தின் புகழ்பெற்ற கால்பந்து வீரரையும் இந்நோய் தாக்கியுள்ளது. சுவிட்சர்லாந்து கால்பந்து கூட்டமைப்பின் தலைவராக உள்ள 70 வயது டொமினி பிளாங்க் ஞாற்றுக்கிழமை சோதனையில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டுள்ளது உறுதியானது.

70 வயதான டொமினிக் பிளாங்க் ஞாயிற்றுக்கிழமை காலை வைரஸ் சோதனையின் முடிவுகளைப் பெற்று தனது வீட்டில் தனிமைப்படுத்தியதாக சுவிஸ் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் செர்பியாவின் கால்பந்து அமைப்பின் தலைவர், 42 வயதான ஸ்லாவியா கோகெஸாவுக்கும் கரோனா வைரஸ் நோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

ஸ்விஸ் சாசர் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:

கோவிட் 19 -இன் பரவல் ஆபத்து காரணமாக ஐரோப்பாவில் தனது தேசிய லீக் கால்பந்துப் போட்டிகளை பாதியில் நிறுத்திய முதல் நாடுகளில் சுவிட்சர்லாந்து ஒன்றாகும்.

மார்ச் 3 ம் தேதி ஐரோப்பிய கால்பந்து அமைப்பான யுஇஎஃப்ஏவின் வருடாந்திர கூட்டத்தில் பிளாங்க் கலந்து கொண்டார், மேலும் 55 உறுப்பு நாடுகளின் தலைவர்களுடன் உள்நாட்டு கால்பந்தாட்டத்தை மூடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்த பிரச்சினையை எழுப்பினார்.

விளையாட்டுப் போட்டிகளை நிறுத்துவது தொடர்பாக ஆம்ஸ்டர்டாமில் நடைபெற்ற கூட்டத்தில் ப்ளாங் பேசியபோது "கரோனா வைரஸ் காரணமாக, நம்மில் ஒரு பகுதியினருக்கு, நமது தொழில்முறை கால்பந்து அதன் அஸ்திவாரங்களை அசைக்கக்கூடிய சூழ்நிலையில் இருக்கிறோம்," என்று கூறினார்.

கூட்டம் நடைபெற்று இரு வாரங்கள் கூட முழுமையடையாத நிலையில் தொண்டை புண் மற்றும் லேசான இருமல் ஏற்பட்டதன் காரணமாக அவருக்கு சோதனைகள் செய்யப்பட்டன. அதன்மூலம் கால்பந்து தலைவருக்கு கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டிருப்பது உறுதியாகியுள்ளது.

இதனைப் பற்றி கால்பந்து தலைவர் குறிப்பிடுகையில், ''நான் இப்போது நன்றாக உணர்கிறேன் மற்றும் லேசான காய்ச்சல் அறிகுறிகளை மட்டுமே கொண்டிருக்கிறேன். என்று கூறியுள்ளார்.

இதனால் சுவிட்சர்லாந்து கூட்டமைப்பின் தலைவர் பிளாங்கிற்கு கரோனா கண்டுள்ள நிலையில் சுவிஸ் கால்பந்தின் தலைமையகம் மூடப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தின் கால்பந்து கூட்டமைப்பு வரும் செவ்வாயன்று யுஇஎஃப்ஏ உடனான மாநாட்டு அழைப்பு பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது, இப்போது கிட்டத்தட்ட முழு பணிநிறுத்தத்தில் உள்ள ஐரோப்பிய கால்பந்து பருவத்தை மீண்டும் தொடங்குவது குறித்த திட்டங்கள் விவாதிக்கும்.

அண்மையில் பிளாங்க் உடன் தொடர்பு கொண்டிருந்த ஊழியர்கள் மருத்துவ ஆலோசனையைப் பெற்று வருகின்றனர்.

இவ்வாறு ஸ்விஸ் சாசர் கூட்டமைப்பு இன்று வெளியிட்டுள்ள தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x