

கரோனா வைரஸ் மிகப்பெரிய அளவில் பாதிப்புக்குள்ளான ஐரோப்பிய நாடான இத்தாலியில் நாளுக்கு நாள் உயிரிழப்புகள் பெருகிவரும் நிலையில் சிகிச்சை அளித்துவரும் செவிலியர்கள் மனச்சோர்வுக்கு ஆளாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்களுக்கு தொடர்ந்து மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
சாதாரண காலங்களில் லோம்பார்டி இத்தாலியின் பொருளாதார இதயம் ஆகும், இது உலகின் சிறந்த சுகாதார அமைப்புகளில் ஒன்றாகும். மிகவும் சுறுசுறுப்போடு இயங்கும் அப்பகுதி தற்போது அங்கு பணியாற்றுவோர் பக்லியாரினியைப் போல - பெரும் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நாடு தழுவிய இத்தாலியில் வைரஸால் 1,400 க்கும் அதிகமான இறப்புகள் மற்றும் 21,000 நோய்த்தொற்றுகள் உள்ளன, நாட்டின் தீவிர சிகிச்சை படுக்கைகளின் கால் பகுதி நோய்வாய்ப்பட்டவர்களால் நிரம்பியுள்ளது.
மருத்துவ ஊழியர்களுக்கு பரவும் வைரஸ்
இவையெல்லாம் ஒருபக்கம் என்றால் இன்னொரு பக்கம் சிகிச்சை மேற்கொள்ளும் மருத்துவ ஊழியர்களே இதில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று முன்தினம் இத்தாலிய ஊடகங்கள் வடக்கு நகரமான பெர்கமோவில் மட்டும் 50 மருத்துவர்களுக்கு செய்யப்பட்ட பரிசோதனைகளில் வைரஸ் நோய்த்தொற்றுக்களை கண்டறிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூர் ஊடகம் ஒன்று, இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியிட்டுள்ள செய்தியில், ''புக்லியா பிராந்தியத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பரிசோதனைக்காக நோயாளிகள் வந்திருந்தனர். அவர்களிடம் வைரஸ் நோய் பரிசோதனை செய்ய சென்ற 70க்கும் மேற்பட்ட மருத்துவ ஊழியர்களுக்கு வைரஸ் நோய்த் தொற்று பரவியதை அடுத்து உடனே அந்த 70 மருத்துவர்களும் தனிமைப்படுத்தலுக்கு செல்ல வேண்டியிருந்தது'' என்று செய்தி வெளியிட்டுள்ளது.
34க்கும் மேற்பட்ட செவிலியர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 100க்கும் மேற்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட குழந்தைகளுக்கு தற்காலிக அம்மாக்களாகவும் செயல்பட்டு வருகின்றனர்.
இதுகுறித்து தங்கள் உணர்வுகளை செல்போன் மூலம் பகிர்ந்துகொண்ட இத்தாலிய சுகாதாரப் பணியாளர்களில் ஒருவர் தனது படத்தைப் பகிர்ந்துகொண்டபோது மிகவும் சோர்வுடன் விழும் காட்சி வைரலாகியது.
இத்தாலியின் நோய்த் தாக்குதல் அதிகம் காணப்படும் லோம்பார்டியின் வடக்குப் பிராந்தியத்தில் பணியாற்றும் ஒரு செவிலியரான பக்லியாரிவின் படம்தான் அது.
தனது பணி செயல்முறை குறித்து கூரியர் டெல்லா செரா செய்தி ஊடகத்திற்கு பக்லியாரி என்ற செவிலியர் தனது செல்போன் வாயிலாகவே பேட்டியளித்தார்.
ஊழியர்கள், வசதிகள் இருந்தும் தொடரும் மரணங்கள்
கூரியர் டெல்லா செரா ஊடகத்திடம் பக்லியாரி கூறுகையில், "ஒருபுறம் எல்லா இடங்களிலும் எனது புகைப்படத்தைப் பார்க்க எனக்கு கோபமாக இருந்தது, எனது பலவீனத்தைக் காட்டியதில் நான் வெட்கப்பட்டேன். ஆனால் நான் மகிழ்ச்சியாக இருந்தேன், ஏனென்றால் என் கதையை உணர்ந்தவர்களிடமிருந்து அழகான செய்திகளைப் பெற்றேன்.
நான் உண்மையில் உடல் சோர்வாக உணரவில்லை, தேவைப்பட்டால் நான் தொடர்ந்து 24 மணி நேரம் வேலை செய்ய முடியும், ஆனால் இப்போது நான் கவலைப்படுகிறேன் என்ற உண்மையை நான் மறைக்க மாட்டேன், ஏனென்றால் எனக்குத் தெரியாத ஒரு எதிரியுடன் நான் போராடுகிறேன்.
இவ்வளவு ஊழியர்கள் வேலை செய்தும் இவ்வளவு வசதிகள் ஏற்படுத்தியும் தொடர்ந்து மரணங்கள் என்றால் நாங்கள் என்ன செய்வது என்று பல சுகாதாரப் பணியாளர்களும் கவலைப்படுகின்றனர். அப்படி கவலைப்படுபவர்களின் ஒருத்திதான் நான்'' என்று தெரிவித்துள்ளார்.
குடும்பத்திடமிருந்து பிரிந்து பணியாற்றும் செவிலியர்கள்
வடக்கு நகரமான பெர்காமோவில் உள்ள மருத்துவமனை பெண் மருத்துவர் டேனியல் மச்சினி (லோம்பார்டியிலும்) பேஸ்புக்கில் எழுதிய பதிவு, பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
அதில் டேனியல் மச்சினி கூறியபோது, "எனது மகனையோ அல்லது எனது குடும்பத்தினரையோ நான் பார்த்ததில் இருந்து கிட்டத்தட்ட இரண்டு வாரங்கள் ஆகின்றன,
ஏனென்றால் அவர்களுக்கு தொற்று ஏற்படுவதைப் பற்றி நான் கவலைப்படுகிறேன். என் மகனின் சில புகைப்படங்களுக்காகவும், என் கண்ணீர் வழியாகவும், சில வீடியோ அழைப்புகளிலும் திருப்தி அடைந்துகொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
முகக்கவசம் அணிந்து பணியாற்றுதலில் உள்ள வலி
இதேபோல டஸ்கன் நகரமான க்ரோசெட்டோவில் உள்ள ஒரு செவிலியர், அலெசியா பொனாரி, ஒரு முகக்கவசம் அணிந்த நீண்ட நாளிலிருந்து அவரது முகம் தாங்கிய அடையாளங்களை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார்.
இதுகுறித்து அலெசியா பொனாரி கூறுகையில், "நான் கவலைப்படுகிறேன், ஏனென்றால் முகக்கவசம் என் முகத்தில் சரியாக பொருந்தாது, நான் தற்செயலாக அழுக்கு கையுறைகளால் என்னையே தொடக்கூடும், கண்ணாடிகள் என் கண்களை முழுவதுமாக மறைக்காது.
பாதுகாப்பு கவசங்களை அணியும் ஊழியர்கள், ஒரு நேரத்தில் ஆறு மணி நேரம் வரை நீர் அருந்தவோ கழிப்பறைக்கு செல்லவோ முடியாது.
பலவாரங்களாக தொடரும் பணிச்சுமை காரணமாக உளவியல் ரீதியாக சக ஊழியர்களும் நானும் சோர்வடைந்துள்ளோம். இதுவே உடல் சோர்வை அதிகரிக்க செய்கிறது'' என்றார்.
மருத்துவ ஊழியர்களுக்கு மனநலக் குழுவின் ஆலோசனை
வடக்கு நகரமான டுரினில் உள்ள சான் ஜியோவானி போஸ்கோ மருத்துவமனை இந்த வாரம் ஒரு மனநல குழுவை தங்கள் ஊழியர்களிடம் அனுப்பியுள்ளது. ஊழியர்களுக்கு தற்போதைய சூழ்நிலையின் மன அழுத்தத்தை எதிர்கொள்ள உதவும் ஆலோசனைகளையும் அவர்கள் வழங்குகின்றனர்.
இது மற்ற ஊழியர்களைவிட அவசர சிகிச்சை பிரிவுகளில் மற்றும் தீவிர சிகிச்சையில் பணியாற்றுவோருக்கு உதவுகிறது.
"இது தேவைப்படுபவர்கள் அனைவரும் எங்கள் முன் வரலாம், அவர்கள் அனைவருக்கும் மனவலியைப்போக்க நாங்கள் இருக்கிறோம்" என்று அணியின் 20 உளவியலாளர்களில் ஒருவரான மோனிகா அக்னெசோன் லா ஸ்டாம்பா செய்தித்தாளிடம் கூறினார்.
இதுகுறித்து அக்னெசோன் லா ஸ்டாம்பா கூறுகையில்,
மற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் மூலம் கூட இது பரவக் கூடும் என்ற பயத்திலேயே பாதி பேர் தவறுகளை செய்பவர்களாக இருக்கிறார்கள். அதனால்தான் தங்கள் உயர்ந்த பணிகளிலிருந்து சிலர் மனச்சோர்வில் சரிந்து விழுந்து பாதிக்கப்படுகிறார்கள்.
உங்களை அத்தகைய மனச்சோர்விலிருந்து வெளியேறக்கூடிய தருணங்களை செதுக்குங்கள். உங்களை மீண்டும் ஒருமிக்கக் தருணங்களை உருவாக்குங்கள், உண்மையில் இது மிகவும் எளிதானது. சுவாச பயிற்சிகளைப் பயன்படுத்துவதன் மூலமும் பிற விஷயங்களில் கவனம் செலுத்துவதன் மூலமும் பதற்றத்தின் அளவு குறையும். இல்லையெனில், "மன அழுத்தம் உங்கள் சக்தியை அழித்துவிடும்" என்று அவர் எச்சரிக்கிறார்.
தமிழில்: பால்நிலவன்