

கரோனா வைரஸ் (கோவிட்-19) பாதிக்கப்பட்ட ஈரானிலிருந்து மீட்டு வரப்பட்ட 234 இந்தியர்கள் ஜெய்சால்மரில் உள்ள இந்திய ராணுவ சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
இரண்டு ஏர் இந்தியா விமனாம் மூலம் அழைத்து வரப்பட்ட இவர்கள் ஞாயிறு காலை ஜெய்சால்மரில் உள்ள ராணுவச் சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டு சோதனைக்கு ஆட்படுத்தப்பட்டுள்ளனர்,
வெளியுறவு அமைச்சர் கூறும்போது, இதில் 131 மாணவர்கள் மற்றும் 103 புனித யாத்திரிகர்கள் அடங்குவார்கள் என்றார்.
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தன் ட்வீட்டில், “ஈரானில் இருந்து 234 இந்தியர்கள் மீட்கப்பட்டு நாடு திரும்பியுள்ளனர். இதில் 131 மாணவர்கள் மற்றும் 101 யாத்திரிகர்கள் அடங்குவார்கள். தூதர் தாமு கதாமுக்கு என் நன்றிகள். இந்திய அதிகாரிகளுக்கு நன்றி. ஜெய்சால்மரில் இவர்கள் ராணுவச் சுகாதார மையத்தில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்” என்றார்.
ராணுவ சுகாதார மையம் சிவில் நிர்வாகத்துடன் இணைந்து பணியாற்றி வருகிறது, வெளிநாட்டிலிருந்து அழைத்து வரப்பட்டட குடிமக்களுக்கு விமான நிலைய அதிகாரிகல் விமானப்படையினர் முறையான அக்கறையுடன் பணியாற்றி வருகின்றனர்.
ஈரானிலிருந்து இதோடு 3வது பேட்ச் இந்தியா திரும்பியுள்ளது. கடந்த வெள்ளிக்கிழமையன்று 44 இந்தியர்கள் ஈரானிலிருந்து அழைத்து வரப்பட்டனர். கடந்த செவ்வாயன்று முதல் பேட்ச்சில் 58 யாத்திரிகர்கள் ஈரானிலிருந்து இந்தியா வந்து சேர்ந்ந்தனர்.